விடயமறிந்தவர்கள் விளங்கப்படுத்துங்கோவன்…

– ஜெகனேஸ்வரன்

கல்வியை தனியார் மயமாக்கக் கூடாது என்று போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஏன் தனியாரிடமும் விடக்கூடாது….? அதில் தவறுகள் ஏற்படுமென்றால் அவற்றுக்கான சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியாதா…?

இப்போது வெளிநாடுகளுக்கு சென்று பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவர்கள்… வெளிவாரி பட்டதாரிகள் இருக்கும் போது தனியார் வருவதால் என்ன பாதிப்பு.

தரப்படுத்தல் காரணமாக ஒரே வினாத்தாளை வெவ்வேறு பிரதேசங்களில் எழுதும் இரு மாணவர்களில் குறைந்த பெறுபேறு எடுத்தவர் பல்கலைக்கழகம் செல்லவும் அவரை விட கூடுதல் பெறுபேறு பெற்றவர் அனுமதி கிடைக்காமல் போகவும் நேர்கிறது… அப்போது அனுமதி கிடைக்காதவர் ஒருவேளை வசதியுடையவராயின் அல்லது உதவி பெற்று பட்டதாரி ஆக தனியார் கல்லூரி உதவலாம் அல்லவா.?

அல்லது இந்தப் போராட்டங்களின் பின்னால் வேறு காரணங்கள் இருக்கின்றனவா…?

இறுதியாக… வெளியே எல்லா விடயங்களிலும் தலையிட்டு போராடும் பல்கலைக்கழக மாணவர்கள்… பலகலைக்கழகத்துக்குள் இருக்கும் பிரச்சனைகளில் நிர்வாகத்துடன் மோதினாலும் மோதுகிறார்களே தவிர துறைகளுடன் மோதுவதில்லையே ஏன்…?

(5 பேரில் 4 பேர் சேர்ந்து தூண்டிவிட ஒருவருக்கு எதிராக போராடுவது போராட்டத்துக்குள் அடங்காது என்று படிச்சவை சொல்லுகினம்)

*

*

Top