‘இயல் இசை மாலை’ கலை நிகழ்வு

 தலைமன்னார் துறைமுகம் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் மற்றும் சின்னக்கரிசல் மாதர் கிராம அபிவிருத்திச்சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து தீபாவளி தினத்தை முன்னிட்டு, நேற்று 15.11.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு ‘இயல் இசை மாலை’ எனும் சிறப்பு இசை நடன நிகழ்ச்சியை தலைமன்னார் துறைமுக அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலை மண்டபத்தில் நடாத்தியது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் கலந்து சிறப்பித்தார். மன்னார் மாவட்டத்தின் பாடசாலைகளின் கலைத்துடிப்புள்ள இளங்கலைஞர்கள் மற்றும் மூத்த கலைஞர்கள் கண்கவரும், வண்ணமயமான, பாரம்பரிய மற்றும் கிராமிய இசை நடன நிகழ்வுகளை, 600 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கொண்ட மிகப்பெரிய சபையில் அரங்கேற்றி பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர்.

இந்த நிகழ்வு இந்திய மற்றும் இலங்கைக் கலைகளை வளர்க்கும் நோக்கில் குறிப்பாக கிராமப்புறங்களில் அவற்றை வளர்க்கும் நோக்கில் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தினால்  நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

'இயல் இசை மாலை' கலை நிகழ்வு (3) 'இயல் இசை மாலை' கலை நிகழ்வு (4) 'இயல் இசை மாலை' கலை நிகழ்வு (5) 'இயல் இசை மாலை' கலை நிகழ்வு (6)

'இயல் இசை மாலை' கலை நிகழ்வு (2)

*

*

Top