வேல்ஸ் சினிமாவின் 16 விருதுகள் யாழ். கலைஞா்களுக்கு

– ஜெ.வினோத், படங்கள்: சிறி.துஷிகரன்

2015ஆம் ஆண்டுக்கான வேல்ஸ் சினிமாப் பட்டறையின் பாலுமகேந்திரா திரைப்பட விருதுகள் வழங்கும் நிகழ்வு 21.11.2015 அன்று சனிக்கிழமை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மாலை 5 மணிக்கு நடைபெற்றது. ஈழத்துக் கலைஞா்களுக்கு அங்கீகாரம் வழங்கும் இந்நிகழ்வில் 16 விருதுகளை யாழ். திரைப்படக் கலைஞா்கள் பெற்றுக் கொண்டனா்.

இவ்விருதுகளில் இயக்குனா் மதிசுதாவின் “தாத்தா“ குறும்படம் சிறந்த இயக்குனா் 2015, சிறந்த குறுந்திரைப்படம், சிறந்த இசை – C.சுதா்சன், வாழ்நாள் சாதனையாளா் – ஏரம்பு ஆகிய 4 விருதுகளைப் பெற்றுக் கொண்டது. அறிமுக இயக்குனா் சோபிகாவின் இயக்கத்தில் உருவான ”மாசறு” குறுந்திரைப்படம், வளா்ந்துவரும் இளம் இயக்குனா், சிறந்த குறுந்திரைப்பட நடிகை (நவயுகா) ஆகிய இரு விருதுகளைப் பெற்றுக் கொண்டது. சிறந்த குறுந்திரைப்பட இயக்குனருக்கான விருதினை “உயிா்வலி” குறுந்திரைப் படத்துக்காக சாளினி சாள்ஸ் பெற்றுக் கொண்டாா்.

அறிமுக இயக்குனா் ஜெ.வினோத்தின் இயக்கத்தில் உருவான ”யாசகம்” குறுந்திரைப்படத்திற்கு வாழ்நாள் சாதனையாளா் விருதினை மகேஸ்வரி ரட்ணம் பெற்றுக் கொண்டாா். சிறந்த திரைக்கதைக்கான விருதினை ”பை” குறுந்திரைப்படத்திற்காக இயக்குனா் சிவராஜ் பெற்றக் கொண்டாா். சிறந்த வளா்ந்துவரும் நடிகருக்கான விருதினை சிந்தா் பெற்றுக் கொண்டாா். சிறந்த நடிகருக்கான விருதினை ”பூவிழி” பாடலுக்காக நடிகா் ஜெராட் பெற்றுக் கொண்டாா். முழுநீளத் திரைப்படத்துக்கான சிறந்த இயக்குனா் விருதை “அச்சம் தவிா்” திரைப்படத்துக்காக இயக்குநா் கவிமாறனும், சிறந்த நடிகருக்கான விருதினை நடிகா் சயனும் சிறந்த தயாரிப்பாளா் விருதினை சுபாஷ்கரனும் பெற்றுக் கொண்டனர்.

செந்தூரனின் மெகந்தி இயக்கத்தில் உருவான “நண்பி” திரைப்படத்துக்காக சிறந்த நடிகை விருதினை சுஜிதா பெற்றுக் கொண்டாா். அத்துடன் சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருதினை சாய்சங்கா் பெற்றுக் கொண்டாா். இவ்விருதுகளை பாலுமகேந்திராவின் சீடனும் “எத்தன்” திரைப்படத்தின் இயக்குனருமான சுரேஷ்கிருஷ்ணா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது

1 (1) 1 (3) 1 (4)

1 (5) 1 (6) 1 (7) 1 (9)

*

*

Top