அமலமரித்தியாகி சுகவாழ்வு நிலையத்தினரால் உளசமூக செயற்திட்டம்

அமலமரித்தியாகி-சுகவாழ்வு-நிலையத்தினரால்-உளசமூக-செயற்திட்டம்

அமலமரித்தியாகி சுகவாழ்வுநிலையத்தினரால் கோப்பாய் பிரதேச செயலகர்பிரிவில் உள சமூகசெயற்திட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுவர்களினையும், பெண்களினையும் இலக்கு குழுக்களாக கொண்டு 12 கிராமசேவகர் பிரிவில் சிறுவர்கழங்கள், மழழைகுழுக்கள், சமூகமட்ட அமைப்புக்கள், கெண்கள் அமைப்புக்கள் போண்றவற்றின் ஊடாக பயிற்சிபட்டறைகள், செயலமர்வுகள் என்பவற்றினை ஆளுமைவிருத்திக்கான வகையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இச்செயற்றிட்டத்தின் அடிப்படையில் இப்பிரதேச சிறுவர்களிற்கான ஆண்டிறுதி பரிசளிப்பு நிகழ்வு 18ம் திகதி வெள்ளிக்கிழமை அமலமரித்தியாகி சுகவாழ்வு நிலையத்தின் உள சமூகப் பணியாளர் பி.றெனிபஸ் தலைமையில் புத்துர் பிரதேசசபை பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் சிறப்பு நிகழ்வாக சிறப்பு ஆண்மீக சொற்பொழிவினை ‘ஆன்மீகமும் ஒழுக்கமும்’ என்னும் விடயப்பொருளில் யாழ்பானம் மத்தியகல்லூரியின் ஆசிரியரும் புத்தாக்க அரங்க இயக்கத்தின் இயக்குனருமான எஸ்.ரி.குமரன் வழங்கினார்.

நிகழ்வில் வலி.கிழக்கு பிரதேச சபையின் செயலாளார் என்.குமணன், வலி.கிழக்கு புத்தூர் கிழக்கு பொறுப்பதிகாரியும் புத்தூர்கிழக்கு வேதபுரீஸ்வரர் தேவாலயத்தின் பிரதமகுருவமாகிய சிவஸ்ரீ மு.தயாபரக்குருக்கள், மற்றும் ஜே/271 சிறுப்பிட்டி கிழக்கு, ஜே/272 சிறுப்பிட்டி மேற்கு, ஜே/273 புத்தூர்மேற்கு, ஜே/278 புத்தூர்கிழக்கு, ஜே/285 அச்சுவேலிகிழக்கு ஆகிய பிரிவுகளின் கிராமசேவகர்கள் மற்றும் அப்பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தர்கள் அமலமரித்தியாகி சுகவாழ்வு நிலையத்தின் பணியாளர்கள் மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

இந் நிகழ்விற்கான அனுசரனையினை இலங்கை தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணிமையம் – பிரான்ஸ் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்

One Comment;

  1. M.janansan said:

    கோப்பாய் பிரதேசத்தில் எத்தனையோ கல்வி கற்கும் மாணவர்கள் மாணவிகள் பாடசாலைகளில் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கல்வி கற்கும் ஆர்வத்துடன் வருகை தருகின்றனர் . சில மாணவர்கள் காலையில் சந்தைக்கு சென்று வேலை செய்துவிட்டு பாடசாலைகளுக்கு நேரம் சென்று வருகை தருவதையும் காணமுடிகிறது .இவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வாங்குவது கூட பெரும் சிறமமாக இருக்கிறது. பாடசாலை வந்து இன்னொரு மாணவரிடம் வாங்குவதும் வழக்கம். ஆனால் அவர்கள் அந்த வருமையிலும் பாடசாலைகளுக்கு வருகை தருகின்றனர் . இவர்களை போல் கோப்பாய் பிரதேசம் புத்தூர் பிரதேசத்தில் காணப்படுகின்றனர். இருப்பவர்கள் 10 பேருக்கு கொடுப்பதை விட இல்லாதவர் ஒருவருக்கு கொடுப்பதே மேல்ஆகும்.கோப்பாய் பிரதேசத்தில் இப்படி பட்ட மாணவர்கள் யாராவது உதவுவார்களா என்று இப்படியான கத்தோலிக்க திருச்சபை கள் எமது பிரதேசத்தில் இருப்பது விரும்பதக்கது . சாதாரணமாக வருமை பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கொடுத்து உக்குவிப்பதே அவர்கள் சமுதாயத்தில் நல்ல மாணவர்கள் ஆக திகழ வழிவகுக்கும் . நீங்கள் வருமைபட்ட மாணவர்களுக்கு உதவ விரும்பினால் எனது மின்அஞ்சலை தொடர்பு கொள்ளவும் சமுதாயத்தில் இளைமறைகாயாக பல வருமையிலும் பாடசாலை வரும் மாணவர்கள் இருக்கிறார்கள். By-mervinfernando janansan

*

*

Top