றோ.க.த.க பாடசாலையின் ஒளிவிழா மற்றும் பரிசளிப்பு விழா

றோ.க.த.க-பாடசாலையின்-ஒளிவிழா-மற்றும்-பரிசளிப்பு-விழா

சுன்னாகம் றோ.க.த.க பாடசாலையின் ஒளிவிழா மற்றும் பரிசளிப்பு விழா என்பன அண்மையில் சுன்னாகம் சிவன் தேவஸ்தான மண்டபத்தில் இடம்பெற்றது. பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பா.கஜதீபன் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்.

மாணவர்களின் நத்தார் நடனம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன் நிகழ்வில் சுன்னாகம் சிவந்தேவஸ்தான பிரதம குருக்கள் மற்றும் சுன்னாகம் கத்தோலிக்க பங்குத்தந்தை மற்றும் உடுவில் சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோருடன் ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

றோ.க.த.க பாடசாலையின் ஒளிவிழா (2) றோ.க.த.க பாடசாலையின் ஒளிவிழா (3)

Related posts

*

*

Top