இளந்தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி 

இளந்தொழில்-முயற்சியாளர்களுக்கு-நிதியுதவி 

உடுவில் பிரதேச செயலகத்துட்பட்ட  இளம்தொழில் முயற்சியாளர்கள் பத்து பேருக்கு UNDP நிறுவனத்தின அனுசரணையுடனான நிதியுதவி அண்மையில் உடுவில் பிரதேச செயலகத்தில்  வழங்கி வைக்கப்பட்டது.

உடுவில் பிரதேச செயலர் நந்தகோபாலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் கலந்து கொண்டு நிதியுதவியினை பயனாளிகளிடம் வழங்கி வைத்தார். அத்துடன் 2014 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களால் வீடுகள் சேதமடைந்த பயனாளிகளுக்கான வீடுகள் திருத்தியமைப்பதற்கான உதவித் தொகைகளும் வழங்கி வைக்கப்பட்டன. நிகழ்வில் பயனாளிகள் உடபட பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

*

*

Top