மட்டு.மாணவி ராஜிதா மருத்துவபீடத்திற்கு தெரிவு

உயிரியல்-பிரிவில்-சாதனை-படைத்தார்-ராஜிதா

எமது பிரதேசத்து மாணவர்கள் எதிர் வருகின்ற காலங்களில் விஞ்ஞான, கணிதப் பிரிவுகளை தெரிவு செய்து பல்கலைக் கழகத்துக்கு தெரிவாகி எமது பிரதேசத்துக்கு பெருமை தேடித்தர வேண்டும் எனக் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட மட்ஃககுஃபேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் உயர்தரப்பரீட்சையில் தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியுள்ள, நாகேந்திரம் ராஜிதா தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ஆம் ஆண்டு பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் க.பொ.த. உயர்தர உயிரியல் பிரிவில் தோற்றிய செல்வி. நாகேந்திரம் ராஜிதா மாணவி A, 2B எனும் பெறுபேறுகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 25ஆவது நிலையில் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகியுள்ளார்.

பரீட்சை பெறுபேற்றின் படி, கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட மட்/ககு/பேத்தாழை விபுலானந்தா கல்லூரியில் பரீட்சை பெறுபேற்றில் பாரியளவான முன்னேற்றத்தை அவதானிக்க முடிகின்றது.

kalkuda_002

இவ்விடயம் தொடர்பாக மாணவி தெரிவிக்கையில்,

பாடசாலையில் உயர்தரப் பிரிவில் உயிரியல் பிரிவு ஆரம்பித்து பரீட்சைக்குத் தோற்றிய முதல் முறையிலேயே பல்கலைக்கழகத்துக்கு தெரிவானமையினையிட்டு பெருமையடைகின்றேன். இதற்கு காரணமான என் பெற்றோருக்கும் பாடசாலை அதிபரான த.சந்திரலிங்கம் அவர்களுக்கும் நன்றியினைக் கூறிக் கொள்கின்றேன். அத்தோடு தனக்கு பாடசாலையில் கற்பித்த ஆசிரியர்களான சிவபதி, சிவகுமார், சர்மிலா, மயூரன் ஆகியோருக்கும் ஏனைய ஆசிரியர்களுக்கும் சக மாணவர்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு, மேலதிக வகுப்புக்களில் கற்பித்த பிரகலாதன், கஜேந்தினி ஆசிரியை ஆகியோருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

Related posts

*

*

Top