புதுக்குடியிருப்பில் ‘மலரட்டும் புதுவசந்தம் – 2016’ கலை நிகழ்வு

இந்திய மற்றும் இலங்கைக் கலைகளை வளர்க்கும் நோக்கில் குறிப்பாக கிராமப்புறங்களில் அவற்றை வளர்க்கும் நோக்கில் யாழ். இந்தியத் துணைத் தூதரகமானது மல்லிகைத்தீவு மல்லிகை இளைஞர் கழகத்தினருடன் இணைந்து புதுவருட மற்றும் தைப்பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு இந்திய இலங்கைக் கலைகளை வளர்க்கும் நோக்கில் குறிப்பாக கிராமப்புறங்களில் அவற்றை வளர்க்கும் நோக்கில் 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை  அன்று பிற்பகல் 3.00 மணிக்கு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் ‘மலரட்டும் புதுவசந்தம் – 2016’ எனும் சிறப்பு இசை நடன நிகழ்ச்சியை நடாத்தவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள கலாமன்றங்களின் மாணவ மாணவியர் தமது ஆற்றுகைகளை வழங்கவுள்ளனர்.

Related posts

*

*

Top