வடக்கில் இன்று முதல் இலவச அம்புலன்ஸ் சேவை

வடக்கில்-இன்று-முதல்-இலவச-அம்புலன்ஸ்-சேவை

வட மாகாணத்தில் இன்று 06.01.2016 புதன்கிழமை முதல் அவசர மருத்துவ நிலைமைகளின்போது பொதுமக்கள் இலவசமாக நோயாளா் காவு வண்டியை பெற்றுக்கொள்ளும் வகையில் அவசரகால அம்புலன்ஸ் சேவை ஆரம்பிக்க பட்டுள்ளது. இன்று பிற்பகல் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் வட மகாகண சுகாதார சேவைகள் அமைச்சா் ப.சத்தியலிங்கம் உத்தியோகபூா்வமாக ஆரம்பித்து வைத்துள்ளாா்.

வட மாகாணத்தில் அவசர நிலைகளிலும், விபத்துகளின் போதும் நோயாளா்களை விரைவாக வைத்தியசாலையில் அனுமதிப்பதன் மூலம் உயிரிழப்புக்களையும் மருத்துவ பின் விளைவுகளையும் குறைக்கும் வகையில் இச்சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னாா் ஆகிய மாவட்டங்களில் இச்சேவை மேற்கொள்ளப்படும். கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அமைந்துள்ள ஒருங்கிணைப்பு நிலையம் நவீன தொழிநுட்ப வசதிகளுடன் இச்சேவையை ஒருங்கிணைத்து வழங்கும் எனவும் வட மாகாண சுகாதார சேவை திணைக்களம் தெரித்துள்ளது.

வட மாகாணத்தைச் சோ்ந்து மக்கள் தங்களின் அவசர மருத்துவ நிலைமைகளின் போது 021 222 4444, மற்றும் 021 222 5555 ஆகிய இலக்கங்களுக்கு தொடா்பினை ஏற்படுத்தி மேற்படி அவசரகால அம்புலன்ஸ் சேவையினை பெற்றுக்கொள்ள முடியும். விபத்துக்கள், அவசர மருத்துவ நிலைகள், அவசர பிரசவ நிலைகள் போன்ற தேவைகளுக்கு இச்சேவையினை பயன்படுத்த முடியும் எனவும், கிளினிக்காக வைத்தியசாலைக்கு செல்லுதல், தனியாா் வைத்தியசாலைக்கு செல்லுதல், அவசரமற்ற மருத்துவ நிலைமைகள் போன்றவற்றுக்கு இச்சேவையினை பயன்படுத்த முடியாது எனவும் வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களும் அறிவி்த்துள்ளது.

download

இதேவேளை பொது மக்கள் இச்சேவையின் முக்கியத்துவம் உணா்ந்து பொறுப்புடன் அவசர தேவைகளுக்க மாத்திரம் உரிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி இச்சேவையினை பெற்றுக்கொள்ளுமாறும், குறித்தச் சேவையினை துஸ்பிரயோகம் செய்யும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் எனவும் வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் கோரியுள்ளது.

இச்சேவையானது அவசர மருத்துவ நிலைமைகளின போது அவசர அழைப்பு எண்களுக்கு தொடா்பினை ஏற்படுத்தும் போது அழைப்பை பெறும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் உள்ள ஒருங்கிணைப்பு அலுவலகம் அழைப்பு விடுத்த இடத்திற்கு அருகில் உள்ள அம்புலன்ஸ் வண்டியை அம்புலன்ஸ் ஜிபிஎஸ் தொழிநுட்ப மூலம் அறிந்து அதன் சாரதிக்கு தகவல் வழங்கும்.

download (1)

சாரதி உரிய இடத்திற்கு சென்று நோயாளியை ஏற்றி நோயாளியின் நிலைமைக்கு ஏற்ப அதற்கான சிகிசை வழங்க கூடிய அருகிலுள்ள வைத்தியசாலையில் நோயாளியை அனுமதித்துடன் அனுமதித்த நேரத்தையும் வைத்தியசாலையின் பெயரையும் ஒருங்கிணைப்பு நிலைய இயக்குநருக்கு அறிவிக்க வேண்டும். இவ்வாறு இச்சேவை செயற்படு்த்தப்படும் அந்த வகையில் யாழை்பபாணத்திற்கு 31 நோயாளா் காவு வண்டியும், கிளிநொச்சிக்கு 18 நோயாளா் காவு வண்டியும், முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் மாவட்டங்களுக்கு தலா 17 நோயாளா் காவு வண்டிகளும் சேவையில் ஈடுபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதல் முதலாக வட மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சேவையின் ஆரம்ப நிகழ்வில் வட மாகாண சுகாதார சேவைகள் அமைச்சா் மாகாண சபை உறுப்பினா்கள், மருத்துவ அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நன்றி :  குளோபல் தமிழ்

Related posts

*

*

Top