‘மலரட்டும் புதுவசந்தம் – 2016’ கலை நிகழ்வு

புதுக்குடியிருப்பு இந்திய மற்றும் இலங்கைக் கலைகளை வளர்க்கும் நோக்கில் குறிப்பாக கிராமப்புறங்களில் அவற்றை வளர்க்கும் நோக்கில் யாழ். இந்தியத் துணைத்தூதரகமானது புதுக்குடியிருப்பு மல்லிகைத்தீவு மல்லிகை இளைஞர் கழகத்தினருடன் இணைந்து புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் விழாக்களை முன்னிட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை 10.01.2016 அன்று மாலை 3.00 மணிக்கு ‘மலரட்டும் புதுவசந்தம்-2016’ எனும் சிறப்பு இசை நடன நிகழ்ச்சியை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி பொன்விழா மண்டபத்தில் நடாத்தியது.

இக்கலை நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பாடசாலைகளின் கலைத்துடிப்புள்ள இளங்கலைஞர்கள் மற்றும் கலாமன்றங்களின் மாணவர்கள் மற்றும் மூத்த கலைஞர்கள் கண்கவரும், வண்ணமயமான, முல்லைத்தீவு மாவட்டத்திற்கே உரித்தான பாரம்பரிய மற்றும் கிராமிய இசை நடன நிகழ்வுகளை, 800 இற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் கொண்ட மிகப்பெரிய சபையில் 150 இற்கும் மேற்பட்ட கலைஞர்கள் தமது கலை நிகழ்வுகளை அரங்கேற்றி பார்வையாளர்களை மகிழ்ச்சிப்படுத்தினர். இந் நிகழ்வில் பல மாற்றுத்திறனாளி சிறுவர் சிறுமியரும் தமது சிறப்பான கலை நிகழ்வுகளை வழங்கி பார்வையாளர்களின் வரவேற்பைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த சிறப்பு இசை நடன நிகழ்வில், யாழ். இந்தியத் துணைத்தூதுவர் ஸ்ரீமான் ஆ.நடராஜன் அவர்கள் தம்பதி சமேதராக கலந்து சிறப்பித்தார். மேலும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி. ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் யாழ்.மாவட்ட அரச அதிபர் வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரச அதிபர் மோகன்றாஸிம் கலந்து சிறப்பித்தனர்.

மலரட்டும் புதுவசந்தம் (1) மலரட்டும் புதுவசந்தம் (2) மலரட்டும் புதுவசந்தம் (3)

மலரட்டும் புதுவசந்தம் (6) மலரட்டும் புதுவசந்தம் (5) மலரட்டும் புதுவசந்தம் (4)

மலரட்டும் புதுவசந்தம் (10)

மலரட்டும் புதுவசந்தம் (9) மலரட்டும் புதுவசந்தம் (8) மலரட்டும் புதுவசந்தம் (7)

Related posts

*

*

Top