நர்த்தனஷேத்திரா நடனப்பள்ளியின் மார்கழி உற்சவம்

நர்த்தனஷேத்திரா நடனப்பள்ளியின் மார்கழி மகாஉற்சவத்தில் கலைமாமணி குரு ஆ.எ. நரசிம்மாசாரியின் ஆடல் அரங்கினை சமர்ப்பணம் செய்யும் நிகழ்வு திருமறைக்கலாமன்றத்தின் கலைத்தூது கலையரங்கத்தில் நேற்று 10.01.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆசியுரையினை கிண்ணியா திருகோணமலை லலித்தாம்பாள் தேவஸ்தானம் சுவாமி ஸ்வஸ்தானந்தா வும், தலைமையுரையினை மாகாணக் கல்வித் திணைக்கள நிர்வாக உதவிக் கல்விப் பணிப்பாளர் தில்லைநாதன் தர்மலிங்கம் குருவந்தனமும் நிகழ்த்தியிருந்தனர்.

நிகழ்விலே ஆடலரங்கங்களாக ஸ்துதி, மாயக்கண்ணன் நர்த்தனஷேத்திரா நடனப்பள்ளி மாணாக்கர்கள் வழங்கியதோடு சிவஸ்துதி நர்த்தனஷேத்திராவின் கலாவித்தகர் மகேந்திரன் தவேந்திரன் மற்றும் செல்வி வானதி விஸ்வநாதன் ஆகியோர் வழங்கியிருந்தனர். அத்துடன் நர்த்தனஷேத்திரா கனிஷ்ட மாணவர் வழங்கிய ‘பக்தி பிரகலாதன்’ (நிருத்திய நாடகம்) இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து கிளி/கிளிநொச்சி மத்திய மாக வித்தியாலய மாணவர்கள் வழங்கும் ‘துள்ளும் மான்கள்’ நடைபெற்றது அதனைத் தொடர்ந்து நாட்டியக் கலைமணி ஸ்ரீமதி யாசோதரா விவேகானந்தன் தயாரிப்பில் திலக நர்தனாலயம் வழங்கும் ‘நிருத்திய நிவேதனம்’ ஆடலரங்கமும் ஹிமாலயா நனடப்பள்ளி வழங்கும் விருட்ஷமும் நர்த்தனஷேத்திரா ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து வழங்கும் ‘மழைக் கையோன்’ நடன நாடகம் இடம்பெற்றது. நன்றியுரையினை நர்த்தனஷேத்திரா நடனப்பள்ளியின் போஷகர் கண்ணன் வழங்கியிருந்தார்.

இவ் ஆடலரங்கம் நிகழ்வுகளிலே பங்கு பற்றிய மாணாக்கர்கள்:

அரங்க ஸ்துதி

gallery 1

சகானா நிமலகுமார், சௌமியா சசிதரன், சுவஸ்திகா சந்திரகுமார், காவ்யா கோபிநாத், உமாப்பீத்தி ஆனந்தகிருஸ்ணன், பிரியகவி பிரபாகரன், நிலாவினி இளங்குமரன், கனிஷா சஞ்சீவன், தரசுதா தர்மலிங்கம், தருணியா ஜெயரூபன், ஆதித்தியா கரிகரகணபதி, ஓவியலக்சினி மகேந்திரன், கவிநயா நந்தகுமார், டிசானிகா கரேந்திரன். பிரகவி மகேஸ்வரன். பிரகதி மகேஸ்வரன், கிஷாலி மகேஸ்வரன், சாயிரா கிருபாகரன், அபிதா யோகராசா, கஜாலினி பகீரதன், மதுவந்தி அனிருத்தன்.

மாயக்கண்ணன்

gallery 2

பைரவி நிமலகுமார், மன்சாரா ரவிச்சந்திரன், லக்ஷா சஞ்சீவன், சிவாஞ்லி நந்தகுமார், ஆதித்தியா அருள்லிங்கம்,நேத்திரா சத்தியகுமார், நர்த்தனா சத்தியரூபன், யுகர்னி குணசீலன், மைத்திரேஜீ அனிருத்தன், கர்சிகா சதானந்தன், தாமிரா சிவசோதி, தீப்திகா சுரேந்திரன், தர்சிகா லவன். செந்தூரி சுரேஸ்குமார்.

பக்த பிரகலாதன்

gallery 3

இரணியனாக வித்யாதரணி மதுராஜ், நரசி;மராக பகிப்பிரியா இராசலிங்கம், பிரகலாதனாக விஷாலி தயாளன், லீலாவதியாக சங்கவி கமலேஸ்வரன், அரக்கர்களாக மிருபா குணசீலன், சகான சிவக்குமார், சுக்கிலாச்சாரியாராக அனுசிகா அருள்லிங்கம், எடுத்துரைஞர்களாக சாம்பவி கமலேஸ்வரன், ஜருணி குணசீலன், நர்த்தனா இரகுலேசன், துஸ்யந்தி இந்திராபாலா, இந்துபி ஜெகதீஸ்வரன், ஜேனுகா சுப்பிரமணியசிவம், டயனிகா இரத்தினேஸ்வரன், மயூரா மணிவண்ணன்.

கிளி/கிளிநொச்சி மத்திய மாக வித்தியாலய மாணவர்கள் வழங்கிய ‘துள்ளும் மான்கள்’

gallery 4

விஜயகுமார் பகலவன், சுபசேன மைத்திரிபால மதுபாலன், பார்த்தீபன் யுவின்சன், அமுதா பிரேமதாஸ், விஜிதா சிவபெருமான், கணேஸ்வரநாதன் ஆரணியன், ரவீந்திரன் வினோஜன், அமரசிங்கம் அபிராஜ், சர்மளா சாந்தகுமார்

நாட்டியக் கலைமணி ஸ்ரீமதி யாசோதரா விவேகானந்தன் தயாரிப்பில் திலக நர்தனாலயம் வழங்கும் ‘நிருத்திய நிவேதனம்’

gallery 5

கீதப்பிரியா பாஸ்கரன், இராஜேந்திரன் ஹர்ஸான், குகாஞ்சலா சுப்பையா, சரண்யா முத்துகுமார், லக்ஷ்மி மோகன், தசாவதாரம்: கவித்ரா கணநாதன், சஹானா சுந்தரமூர்த்தி, பிரியாஞ்சலா சுப்பையா, கேஷாலினி ராஜாராம், ருக்சனா கணராஜ், யுவந்திகா நந்தகோபாலாலன், கீர்த்தனா யோகேஸ்வரன், சவிஸ்னிகா இராஜகுபேந்திரன், நயணவர்ஷினி சிவபாலன், பிரகாஷினி பாலசுந்தரம்

ஹிமாலயா நனடப்பள்ளி வழங்கும் ‘விருட்ஷம்’

gallery 6

கரிகாலன் ரிஷிவர்மன், நியூட்டன் லிமோகஸ் ஸ்ரெவான், சண்முகரெட்ணம் டார்வின், சுரேந்திரன் சணோஜன், ராம்சுந்தர் காந்தரூபன், ஜெபராஜா மேசாக், கணேஸலிங்கம் விதுர்ஷன், ஜீவதாஸ் ஜீவிதன், தேவபாலன் லுஜீதன், தங்கராஜா தனுஜன், செல்லத்துரை ஸ்ரீகண்ணன்

நர்த்தனஷேத்திரா ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து வழங்கும் ‘மழைக் கையோன்’ நடன நாடகம்

gallery 7

கர்ணனாக ஸ்ரீமதி பிரியதர்சினி வாகீசனும், எடுத்துரைஞர்களாக செல்வி பகிப்பிரியா இராசலிங்கம், ஸ்ரீமதி வித்யதாரணி மதுராஜ், செல்வி கர்சினி கணேசு, செல்வி பவித்திரா தயாபரன், செல்வி சரவண்யா தட்சணாமூர்த்தி, செல்வி றஜேந்தினி மற்றும் இராசேந்திரமும், சகுனியாக செல்வி வானதி விஸ்வநாதனும், அருச்சுணனனாக செல்வி துளசிகா தபானந்தனும், குந்தியாக செல்வி ஆதித்தியா ஜெயபாலனும், கிருஷ்ணனாக இலங்கரட்ணம் சஜித்தும், கிருபராக வடிவேல் தினெஸிம், கிழப்பிராமணராக யோசப் அனுராஜிம், துரியோதனனாக துரைசிங்கம் வாகீசனும் நடித்துள்ளனர்.

அரங்கக் கலைஞர்களாகக் நட்டுவாங்கம் நாட்டியக் கலைமணி ஸ்ரீமதி யசோதரா விவேகானந்தன், கலாவித்தகர் ஸ்ரீமதி பிரியதர்சினி வாகீசன், நுண்கலைமாணி ஜெயக்குமாரரி திருக்குமாரன், கலாவித்தகர் மகேந்திரன் தவேந்திரன், கலாவித்தகர் செல்லத்துரை ஸ்ரீகண்ணனும் குரலிசை சங்கீத வித்துவான் பொன் ஸ்ரீவாமதேவன், நுண்கலைமாணி ஸ்ரீமதி சுபதர்சினி சோதிரூபன், குகேந்திரன் அனுசன், கலாவித்தகர் மகாலிங்கம் தயாபரன், கலாவித்தகர் அழகேசன் அமிர்தலோஜன், கலாவித்தகர் அழகேசன் அமிர்தலோஜனும், மிருதங்கம் இசைக்கலைமணி சின்னத்துரை துரைராஜா, கலாவித்தகர் கந்தசாமி நந்தகுமார், கலாவித்தகர் கிருபா அனந்தகோபன், நாதமணி மகேந்திரனும் வயலின் இசைஞானசுரபி அம்பலவாணன் ஜெயராமனும், ஓகன் இம்மானுவேல் மனுசங்கர். ஒளியமைப்பு கிரிதர்ஷன் நிகோலன். ஒலியமைப்பு திருமுருகன் (வண்ணார்பண்ணை, யாழ்) வீடியோ எஸ்.ரமணன், புகைப்படம் ஸ்ரூடியோ 4 டைமன்சன், நிகழ்சித்தொகுப்பு கலாவித்தகர் ஸ்ரீமதி சசிகலா கேதீஸ்வரனும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தனர்.

*

*

Top