நீர்வேலியில் இடம்பெற்ற திருவாசக இசை நிகழ்வு

ஈழத்தின் முன்னணி சாஸ்த்திரிய சங்கீதப் பாடகர் தவநாதன் றொபேட்டின் திருவாசக இசைக் கச்சேரி நிகழ்வு 12.01.2016 செவ்வாய்க்கிழமை நீர்வேலி இராச வீதியில் அமைந்துள்ள பொன் செல்வமகால் மண்டபத்தில் நடைபெற்றது. பிரம்மஸ்ரீ நீர்வை தியாக. மயூரகிரிக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. ஒரு மணி நேரம் நடைபெற்ற இக்கச்சேரிக்கு அணிசேர் கலைஞர்களாக வயலின் – சுருதி வேந்தன் அம்பலவாணர் ஜெயராமனும் மிருதங்கம் – யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கணபதிப்பிள்ளை கஜனும் பங்கு கொண்டனர்.

நிகழ்வின் நிறைவில் அகில இலங்கை இந்து மாமன்றம் வெளியிட்ட இந்து மக்களுக்கு ஒரு கையேடு என்ற நூல் மீளப் பதிப்பிக்கப்பெற்று அமரர் நவமணி சந்திரமௌலீசன் நினைவாக வழங்கப்பட்டது. இதன் முதன்மைப் பிரதிகளை நீர்வேலியின் மூத்த சிவாச்சாரியார் பிரம்மஸ்ரீ கு.தியாகராஜக் குருக்கள், நீர்வேலி அரசகேசரிப் பிள்ளையார் ஆலயப் பிரதமகுரு பிரம்மஸ்ரீ சா. சோமதேவக் குருக்கள், மாங்குளம் அமதிக்கரங்கள் நிலைய இயக்குநர் அருட்பணி செ. அன்புராசா அடிகளார் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டோருள் ஒரு பகுதியினருக்கு தமிழார்வலர் நா. குமரிவேந்தன், தனித் தமிழ் நாட்காட்டியை இலவசமாக வழங்கினார்.

Related posts

*

*

Top