அரச இலக்கிய விருது வழங்கல் – 2016

கலாசார அலுவல்கள் திணைக்களம் அரச இலக்கிய விருது வழங்கல் தொடர்பான அறிவித்தலை விடுத்துள்ளது. 2015 ஆம் ஆண்டு இலங்கையில் நூல்களை வெளியிட்ட இலங்கை எழுத்தாளர்களும் நூல் வெளியீட்டாளர்களும் இவ்விருதுக்கு விண்ணப்பிக்க முடியும்.

2015 ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசெம்பர் 31 ஆம் திகதி வரை முதல் பதிப்பாக வெளியிட்ட 48 பக்கங்களுக்கு மேற்பட்ட தமது நூல்களின் பிரதிகளை போட்டிக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

அரச இலக்கிய விழா ஏற்பாட்டுப் பிரிவு, கலாசார அலுவல்கள் திணைக்களம், 8 ஆம் மாடி செத்சிறிபாய, பத்திரமுல்ல எனும் முகவரிக்கு பதிவுத் தபால் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ பெப்ருவரி 29 ஆம் திகதிக்கு முன்பதாக அனுப்பி வைத்தல் வேண்டுமென கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

சுயநாவல், சுயசிறுகதை, சுய கவிதைப் படைப்பு, சுய இளையோர் இலக்கியப் படைப்பு, சுய பாடலாக்கத் தொகுப்பு, சுய நாடகம், 16 பக்கங்களுக்கு குறையாத சுய அறிவியல் புனைகதை, சிறுவர் இலக்கியப் படைப்பு , சுயபுலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு, நானாவித விடய நூல்கள், மொழி பெயர்ப்பு நாவல், மொழி பெயர்ப்பு சிறுகதை தொகுப்பு, மொழி பெயர்ப்பு கவிதை, மொழி பெயர்ப்பு நாடகம், மொழி பெயர்ப்பு புலமைத்துவ மற்றும் ஆய்வுசார் படைப்பு .

ஆகிய விடயங்களில் சிங்கள, தமிழ், ஆங்கில மொழிகளில் பிரசுரமான நூல்கள் போட்டிக்கு ஏற்றுக் கொள்ளப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விருது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு திணைக்களத்தின் 011 2872030, 011 2872031 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் அலுவலக நாள்களில், அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளுமாறும் திணைக்களப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

Related posts

*

*

Top