நல்லூரில் தவில்மேதை தெட்சணாமூர்த்திக்கு விழா

தவில்மேதை தெட்சணாமூர்த்தி அமையம் நடத்தும் லயஞானகுபேரபூபதி தெட்சணாமூர்த்தியின் வரலாற்று ஆவண இறுவட்டு மற்றும் தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம் என்ற நூல் ஆகியவற்றின் வெளியீட்டு நிகழ்வுகள் இன்று 30.01.2016 சனிக்கிழமை, காலை-மாலை அமர்வுகளாக நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளன.

தெட்சணாமூர்த்தி அமையத்தின் தலைவர் (மகாராணி) க.சோமசேகரம் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்திற்கான இந்தியத்துணைத்தூதர் ஆ.நடராஜன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ள்வுள்ளார்.

இறுவட்டு மற்றும் நூல் வெளியீட்டிற்கான வெளியீட்டுரையை தெட்சணாமூர்த்தி ஆவணப்பட இயக்குநர் அம்ஷன்குமார் ஆற்றவுள்ளார். ஆவணநூல் மற்றும் இறுவட்டின் விலை ரூபா 1500/- ஆகும்.

*

*

Top