யுத்தம் அழித்த வாழ்வை மீட்டளிக்கும் கைத்தொழில்

இரண்டாம் உலக மகாயுத்தத்தில் அழிவடைந்த ஜப்பான் அழிவிலிருந்து மீண்டு மக்களின் முயற்சியால் பெரிய பணக்கார நாடாக மாற்றமடைந்துள்ளது. எமது நாடும் கடந்த காலங்களில் இடம் பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்டது.

இன்றைய சூழலில் யுத்தம் முடிவடைந்த போதும் யுத்தம் ஏற்படுத்திய அழிவுகளிலிருந்து மக்கள் முற்றாக மீளவில்லை இதிலிருந்து மீள்வதற்கு அரசாங்கத்தையோ, வேறு நிறுவனங்களையோ முற்றாக நம்பி இருப்பது யதார்த்தத்தில் பயனளிக்கப் போவதில்லை என்பது பொருளாதார நிபுணர்களின் கருத்தாகும். இதற்கு மாற்றாக மக்கள் சுயதொழில்  முயற்சிகளின் மூலம் தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவது அவசியமானதாகும்.

இந்த வகையில் வலிகாமம் தெற்கு உடுவில் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டு உடுவில், இணுவில், சுன்னாகம், ஏழாலை, தாவடி, கந்தரோடை, சங்குவேலி ஆகிய கிராமங்களில் வௌ;வேறுபட்ட ஏராளமான     சிறிய, நடுத்தரக் கைத்தொழிற்சாலைகள் உள்ளன.

அண்ணா கோப்பி உணவுற்பத்திச்சாலை, ஜசுபி பழத்தொழிற்சாலை, மிக்ஷர் கைத் தொழிற்சாலை, வெதுப்பகக் கைத்தொழில், பாற்பண்ணை உற்பத்திச்சாலை, குளிர்களி உற்பத்திச்சாலை, மரக்கைத்தொழிற்சாலை, புகையிலை உற்பத்திச்சாலை, பனம்பொருள் உற்பத்திச்சாலை, கள் உற்பத்தி நிலையம் போன்றன  இவ்வாறான  கைத்தொழிற்சாலைகளில் சிலவாகும்.

அண்ணா கோப்பி கைத்தொழிற்சாலை இணுவில் தெற்கிலும், ஜசுபி பழத்தொழிற்சாலை உடுவில் மேற்கிலும், தச்சுத் தொழிலகம் பெருமளவில் உடுவிலிலும், குறைந்தளவில் இணுவில், தாவடி, மற்றும் ஏழாலையிலும் காணப்படுகின்றன.

ஆரம்பகாலம் தொட்டு அதாவது இற்றைக்கு நாற்பதுக்கு மேற்பட்ட வருடங்களிற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட அண்ணா கோப்பி கைத்தொழிற்சாலை, பதினைந்து வருடங்களிற்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட ஜசுபி பழத்தொழிற்சாலை என்பனவே ஏற்றுமதி வாய்ப்புள்ள அதிகளவு வருமானம் தரும்நடுத்தரக் கைத்தொழில்களாகக் காணப்படுகின்றன.

அதற்கு அடுத்தபடியாக புகை யிலை சார் உற்பத்தி, மரக்கைத்தொழில் போன்றவை குடிசைக் கைத்தொழில்களாகவே இடம் பெறுகின்றன.  வெதுப்பகக்கைத் தொழில், ஐஸ்கிறீம் உற்பத்தி என்பன வியாபார நிலையங்களுடாக ஓரளவு வருமானத்தைத் தருவிக்கின்றன.

மேலும் பாற்பண்ணை உற்பத்திகள் இன்று சிறப்பாக இடம்பெறுகின்றன. பாற்பனீர் உற்பத்தி, பதப்படுத்திய பாலுற்பத்தி, சர்பத் உற்பத்தி, மில்க்ரொபி உற்பத்தி, பசு நெய் மற்றும் பாற்பனீர் கறி உற்பத்தி, தயிர் உற்பத்தி என்பன அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இச்சிறுகைத் தொழில்கள் பல தடை கள், பிரச்சினைகள், சவால்கள், போட்டிகள் என்பவற்றினை எதிர்கொண்டும் ஈடுகொடுத்துமே வெற்றிகரமாக இயங்கி வருகின்றன. பெரும் பாலும் உள்ளூர் மூலவளங்களும், ஓரளவு வெளியூர் மூலவளங்களும் கொண்டிருக்கும் சிறுகைத்தொழில்கள் மூலப்பொருட்கள்  சார்பான பிரச்சினைகள்,  உற்பத்தியாளர்சார்  பிரச்சினை கள், தொழிநுட்ப மற்றும் இயந்திர சாதனம்சார் பிரச்சினைகள், சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளையும் அதிகம் எதிர்கொண்டு வருகின்றன.

அதிகளவில் நன்மைகளே காணப்படுகின்ற போதிலும் சில கைத்தொழில் களிற்குரிய தொழிலாளர் போதாமையும், மூலவள விலை அதிகரிப்பும் சிறிதளவு பிரச்சினையாகவுள்ளது.

கூட்டுறவு சமாசங்களதும், அமைச்சினதும் அனுசரணையுடனும் வங்கிகளின் சிறுகைத்தொழில் தொடர்பான திட்டங்களும் சிறிய,நடுத்தரக் கைத் தொழில்உற்பத்திகள் குறித்த பிரதேசத்தில் சீராக இடம் பெற்று வருவதைக் காணலாம்.

 ‘இன்று மரக்கைத் தொழில்; பெரும்பாலும் இது குடிசைக் கைத்தொழிலாக இடம்பெறுகின்றது. மூலதன வசதி குறைவானோரே இதனை மேற்கொள்கின்றனர். இன்றைய காலத்தில்  மர வகைகள் அதிகளவு பெறுமதியுடன்காணப்படு கின்றன.

முதிரை, பாலை, வேம்பு போன்ற மரங்களும் விலை அதிகரித்துள்ளது. இவ் விலையேற்றம் என்னைப்போன்ற சிறு கைத்தொழில் மேற்கொள்வோர்க்குப் பிரச்சினையாகவுள்ளது. என்கிறார் சங்குவேலியைச் சேர்ந்த வேல்முருகன் மரத்தொழிற்சாலை உரிமையாளர் வேல்முருகன்.

அத்துடன் ‘தொழினுட்பம் போதாமையும் எமக்குப் பிரச்சினையாகக் காணப்படுகின்றது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் மூலம் தொழிற்ப் பயிற்சிகளை வழங்கும் போது சிறுகைத் தொழிலில்  பாரிய மாற்றத்தை உண்டு பண்ணலாம். இல்லாவிடில் மரக்கைத்தொழிலாளர்கள் வேறு தொழில்களை நாடிச் செல்லும் சந்தர்ப்பங்கள் அதிகரிக்கலாம்.’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த உள்நாட்டு யுத்தகாலத்தில் வெளியூர் மூலவள இறக்குமதியின்மை சில கைத்தொழில்களின் உற்பத்தியையும், ஏற்றுமதியையும் பெருமளவு பாதித்தது. தொழிலாளர்கள் விலகுதல், சில தொழில்களிற்குரிய ஆர்வம்குறைதல் (பனம்பொருள் உற்பத்திகள், கள் உற்பத்தி, புகையிலை பதனிடல் என்பன), சிறு கைத்தொழில் முயற்சியாளர்களுக்கு எல்லாக் கைத்தொழிலிற்கும் போதிய பயிற்சி இன்மை (மரக்கைத் தொழில்), போதிய நிதிவசதி இன்மை மற்றும் சிறு தொழில் செய்வது தாழ்வானது என்ற சமூக வரையறை போன்றவையும் சிறு கைத்தொழில் வீழ்ச்சிக்குக் காரணிகளாகும்.

உள்ளூரில் விவசாயம் சார் மூலப்பொருட்கள் அதிகளவு இருக்கின்ற போதிலும் அவற்றினைக் கொண்டு சிறு கைத்தொழில்களை இன்னமும் விருத்தி செய்ய முடியும். ஆனால் இன்று முன்னரை விட கல்வி அறிவு  விருத்தி,  இதனால்  பிரதேச மக்கள் அதிகளவில் அரச உத்தியோகம் நாடிச் செல்லுதல் போன்றவற்றால் அவை மட்டுப் படுத்தபட்டு வருகின்றன.

 – S.K.ராஜ்

511

நன்றி : (புகைப்படங்கள்) www.www.ft.lk

*

*

Top