எடிசன் தமிழ் திரைப்பட விருது விழா – 2016

ஒன்பதாவது எடிசன் தமிழ் திரைப்பட விருது விழா எதிர்வரும்  14.02.2016 ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடைபெவுள்ளது. ஆண்டுதோறும் தமிழ்திரைத் துறையினருக்கு வழங்கப்படும் முக்கிய விருதுகளில் ஒன்றாக எடிசன் விருது கருதப்படுகிறது.

2006ஆம் ஆண்டு நடிகர் கமல்ஹாசனால் ஆரம்பித்து வைக்கப்பட்ட தமிழ் மூவி இணையத்தளம் 2008 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் கலைஞர்களுக்கு எடிசன் விருதினை வழங்கி வருகிறது. வருடா வருடம் தமிழ் மூவி இணையத்தளம் மற்றும் உலகெங்கிலும் உள்ள 7 தமிழ் தொலைக்காட்சிகள் இந்த விருது விழாவை இணைந்து நடத்துகின்றன. 7 நாட்டு தமிழ் தொலைகாட்சிகளிலும் இந்த விருது வழங்கும் நிகழ்வு ஒளிபரப்பு செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்விருது தமிழ் திரைப்பட நடிகர் நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள், பின்னணிப் பாடகர்கள், பாடலாசிரியர்கள், சண்டைப்பயிற்சியர்கள், நடன ஆசிரியர்கள், ஒளிப்பதிவு, எடிட்டிங், கலை இயக்குனர்கள் மேலும் பல திரைப்பட நட்சத்திரங்கள் என அனைத்து பிரிவினர்க்கும் ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது.

இத்தேர்வு தமிழ்பேசும் உலகெங்கிலுமுள்ள உள்ள தமிழ்தொலைகாட்சிகள், வானொலிகள், இணையத்தளங்கள், ஊடாக எஸ்எம்எஸ் வாக்கெடுப்பினூடாக தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு அம்சமாக மலேசியா, சிங்கப்பூர், இலண்டன், பிரான்ஸ், கனடா உட்பட புலம்பெயர் நாடுகளில் உள்ள நடிகர், நடிகைகள்,தமிழ் திரையுலகின் நடிகர், நடிகைகளின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

உலகெங்கிலும் உள்ள பல இளம் திறமை மிக்க கலைஞர்கள் தமது திறமையை வெளிப்படுத்துவதற்கு இந்த விருது வழங்கும் நிகழ்வு களம்அமைத்து கொடுக்கிறது. இந்த நிகழ்வில் சிறப்பாக தமது திறமையை வெளிப்படுத்திய 13 கலைஞர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

தமிழ் மூவி இணையத்தளம் ஊடாக உலகெங்கிலும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்கள் வெகு விருப்போடு தமக்கு பிடித்த கலைஞர்களுக்கு தமதுவாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். பெப்ரவரி 4ம் திகதி வரை முப்பத்தைந்து லட்சம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்நிகழ்ச்சியில் தமிழ் திரையுலகினர், பன்னாட்டு தமிழ்தொலைக்காட்சியின் நிர்வாகிகள், தொழில் அதிபர்கள், அயல்நாட்டு அரசுதூதர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.

உலகத்தின் எந்த மூலையில் இருக்கின்ற கலைஞர்களாக இருந்தாலும்அவர்களுக்கு களம் அமைத்துக் கொடுப்பதற்கு தமது நிறுவனம் தயாராகஇருப்பதாக அதன் தலைமை நிர்வாகி செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

Related posts

*

*

Top