‘நிழல்’ நூல் வெளியீட்டு விழா

யாழ். மாவட்டத்தில் உள்ள தொண்டு நிறுவனங்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பாக அமையும் ‘நிழல்’ என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று 06.02.2016 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு சுன்னாகம் வாழ்வகத்தில் உள்ள செல்வா மண்டபத்தில் நடைபெற்றது.

தினக்குரல் பத்திரிகையாளர் என்.கே. குலசிங்கத்தால் எழுதப்பட்ட இந்நூல் வெளியீட்டு விழாவிற்கு யாழ். பல்கலைக்கழக வணிகத்துறைத் தலைவர் பேராசிரியர் க.தேவராஜா தலைமை தாங்கினார். பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாதன் கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார். நூலின் முதற்பிரதியை தினக்குரல் பத்திரிகையின் முகாமைத்துவப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி பீ.கேசவராஜா பெற்றுக் கொண்டார்.

நூலின் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜாவும் ஆய்வுரையை கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசனும் நயப்புரையை பலாலி ஆசிரிய கலாசாலை முன்னாள் அதிபர் கவிஞர் சோ.பத்மநாதனும் ஆற்றியிருந்தனர்.

யாழ். மாவட்டத்தில் உள்ள முப்பத்திரண்டு தொண்டு நிறுவனங்கள் பற்றிய பதிவாக இந்நூல் அமைந்துள்ளது. பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் எழுத்தாளர் ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் நல்லூர் பிரதேச செயலக கலாசாரப் பேரவையால் இந்நூல் வெளியிடப்பட்டது.

நூலாசிரியரான என்.கே.குலசிங்கம் உரும்பிராயைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கல்வியங்காட்டை வதிவிடமாகக் கொண்டவர். சமூக சேவையில் ஆர்வம் மிக்கவர். அகில இலங்கை சமாதான நீதிவானாகவும் விளங்குகின்றார். ஊடகத்துறையில் 35 வருடங்கள் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உண்டு.

'நிழல்' நூல் வெளியீட்டு விழா (1) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (2)

'நிழல்' நூல் வெளியீட்டு விழா (3) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (4) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (5) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (6)

'நிழல்' நூல் வெளியீட்டு விழா (7) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (8) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (9) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (10)

'நிழல்' நூல் வெளியீட்டு விழா (11) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (12) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (13) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (14)

'நிழல்' நூல் வெளியீட்டு விழா (15) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (16) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (17) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (18)

'நிழல்' நூல் வெளியீட்டு விழா (19) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (20) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (21) 'நிழல்' நூல் வெளியீட்டு விழா (22)

Related posts

*

*

Top