திருப்பாடுகளின் நாடகத்திற்கான பிரதி வழங்கும் வைபவம்

திருமறைக் கலாமன்றத்தால் ஆண்டு தோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் மேடையேற்றப்படும் இயேசுவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை சித்திரிக்கும் திருப்பாடுகளின் நாடகத்திற்கான பிரதி வழங்கும் வைபவம் தவக்காலத்தின் ஆரம்ப நாளாகிய புதன்கிழமை மாலை 5.00 மணிக்கு மன்றத்தின் கலைத்தூது மணிமண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் யாழ்.புனித அடைக்கல அன்னை ஆலய பங்குத்தந்தை அருள்பணி.ஜே.பி.அன்ரனிதாஸ் அடிகளார் கலந்துகொண்டு இவ் ஆற்றுகையில் பங்கேற்கவுள்ள நடிகர்கள் உற்பட ஏனைய துறைசார்ந்த பிரிவுகளுக்கான பிரதிகளை வழங்கவுள்ளார்.

பிரதி வழங்கும் வைபவத்தில் வழமையாக திருப்பாடுகளின் நாடகத்தில் பங்கேற்கின்ற அனைத்துக் கலைஞர்களையும் இம்முறை புதிதாக இணைந்து பங்குபற்ற விரும்பமுடையவர்களையும் கலந்து கொள்ளுமாறு திருமறைக் கலாமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

திருப்பாடுகளின் நாடகம் மார்ச் மாதம் 17,18,19,20ஆம் திகதிகளில் மாலை 6.45 மணிக்கு யாழ்.திருமறைக் கலாமன்ற அரங்கிலும், மார்ச் மாதம் 05 ஆம் திகதி மாலை 6.45 மணிக்கு இளவாலை திருமறைக் கலாமன்ற அரங்கிலும் மேடையேற்றப்படவுள்ளது.

‘வேள்வித் திருமகன்’ என்னும் பெயரில் 2012, 2014 ஆம் ஆணடுகளில் மேடையேற்றப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்ற திருப்பாடுகளின் நாடகமே இம்முறையும் மேடையேற்றப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

*

*

Top