யாழ்.மக்கள் கருத்தறியும் இணையதளம்

Barack Obama

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் பொறுப்புக் கூறல் தொடர்பில் அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள விசாரணை பொறிமுறை பற்றி நாட்டு மக்களின் கருத்தறிவதற்கான செயற்பாடு யாழ்ப்பாணத்தில் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீரவினால் துவங்கி வைக்கப்பட்டிருக்கின்றது.

மக்கள் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்காக இணையதளம் ஒன்றையும் அமைச்சர் மங்கள சமரவீர தொடங்கி வைத்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்ப்பினர் சுமந்திரன், யாழ். அரச அதிபர், படையதிகாரிகள், விசாரணை பொறிமுறைக்கான ஆலோசனைகளை திரட்டுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் மங்கள சமரவீர, விசாரணை பொறிமுறைக்கான ஆலோசனைகள் ஏன் திரட்டப்படுகின்றன என்பது குறித்து விளக்கம் அளித்தார். ‘ஜெனீவா தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதற்காக தற்போது எம் முன்னால் உள்ள சந்தர்ப்பத்தைப் நாங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சர்வதேச அழுத்தத்திற்காக நாங்கள் இவற்றை நடைமுறைப் படுத்துவதற்கு முயற்சிக்கவில்லை’ என்றார் மங்கள சமரவீர.

‘எமது நாட்டினதும், மக்களினதும் கௌரவத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், உலக நாடுகளில் இலங்கை பலமுள்ள ஒரு ஜனநாயக நாடாக திகழ வேண்டும் என்பதற்காகவுமே நாங்கள் இதனைச் செய்ய வேண்டியிருக்கின்றது’ என்றும் கூறினார் சமரவீர.

‘நிலையான சமாதானத்தையும், பொருளாதாரம் மற்றும் சமூக அபிவிருத்தியையும் ஏற்படுத்தி முன்னோக்கி நகர்வதற்கு நல்லிணக்கமும் பொறுப்பு கூறுதலும் மிகவும் முக்கியமாகும் என்பதை எமது அரசாங்கம் உளப்பூர்வமாக நம்புகின்றது’ வௌியுறவு அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டினார்.

மக்களைக் குழப்புவதற்கான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பவர்கள் குறித்து மக்கள் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Related posts

*

*

Top