செல்வி தர்ஷனா அனுஷனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Barack Obama

ஏழிசை மிருதங்க நர்த்தனாலய மாணவியும், சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியுமான செல்வி தர்ஷனா அனுஷனின் பரதநாட்டிய அரங்கேற்றம் யாழ்.இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று 21.02.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கொக்குவில் கலாபவன அதிபர் கலாகீர்த்தி திருமதி சாந்தினி சிவநேசனும் சிறப்பு விருந்தினரர்களாக சுண்டிக்குளி மகளிர் கல்லூரி அதிபர் திருமதி துஷ்யந்தி துஷிதரனும் யாழ்.பல்கலைக்கழக இசைத்துறை முன்னாள் விரிவுரையாளர் முழவியல் ஞாயிறு மா.சிதம்பரநாதனும் உரும்பிராய் கலைக்கோவில் அதிபர் கலாபூஷணம் திருமதி பத்மினி செல்வேந்திரக்குமாரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் அணிசெய் கலைஞர்களாக நட்டு வாங்கம் மற்றும் நடன அமைப்பினை திருமதி பாலினி கண்ணதாஸிம், பாட்டினை தவநாதன் றொபேட்டும், மிருதங்க இசையினை நல்லை கணேசசுந்தரம் கண்ணதாஸிம், வயலின் இசையை அம்பலவாணர் ஜெயராமும் வழங்கினர்.

செல்வி தர்ஷனா அனுஷனின் பரதநாட்டிய அரங்கேற்றம் 1 செல்வி தர்ஷனா அனுஷனின் பரதநாட்டிய அரங்கேற்றம் 2

Related posts

*

*

Top