மாநகர சபையின் புதிய இணையத்தளம் அங்குரார்ப்பணம்

Barack Obama

- சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாணம் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உத்தியோகபூர்வமாக நேற்று 26.02.2016 வெள்ளிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.

மாநகர ஆணையாளர் பொன்னம்பலம் வாகீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் http://jaffna.mc.gov.lk என்ற மாநகர இணையத்தளம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

பொதுமக்கள் குறைகேள், பொதுமக்கள் ஆலோசனைகள் ஆகியவற்றை பதிவிடக்கூடிய வகையில் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் மாநகர சபை ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

Related posts

*

*

Top