தமிழ் மருத்துவ கழகத்தின் நிதியுதவியில் கண் பரிசோதனை முகாம்

Barack Obama
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவியில் இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று 28.02.2016 ஞாயிற்றுக் கிழமை காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 150க்கு மேற்பட்ட மல்லாவிப் பிரதேச வறுமைக் கோட்டுக்குட்பட்ட மக்கள் பயனடைந்தனர். இக்கண் பரிசோதனை முகாம் கனடா தமிழ் மருத்துவ கழகத்தின் நிதியுதவியுடனும், கனடா மற்றும் கிளிநொச்சி மாவட்ட ரொட்டரி கழகத்தின் பங்களிப்புடனும் நடைபெற்றது. நிகழ்வில் கனடா தமிழ் மருத்துவ கழகம், கனடா மற்றும் கிளிநொச்சி மாவட்ட ரொட்டரி கழகத்தின் பிரதிநிதிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Related posts

*

*

Top