வேதநாயகம் தபேந்திரனின் ‘யாழ்ப்பாண நினைவுகள்- 2 ‘ நூல் அறிமுகவிழா

மட்டக்களப்பு  மாநகர சபையின் அனுசரணையுடன் மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்திய வேதநாயகம் பேந்திரனின் ‘யாழ்ப்பாண நினைவுகள்- 2″ நூல் அறிமுகவிழா கடந்த 28.02.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் தலைமையினை கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை தலைவர் திருமதி ரூபி வலென்ரீனா பிரான்சிஸ் ஏற்றதோடு வரவேற்புரையை மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் தலைவர் வி.மைக்கல் கொலினும், நூலாசிரியர் அறிமுகத்தை மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தன் சிறிதரனும் நிகழ்த்தினர்.

நூலின் முதல் பிரதியை மகப்பேற்று மருத்துவ நிபுணர் மார்க்கண்டு திருக்குமார் பெற்றுக் கொண்டார். நூல் மதிப்பீட்டுரையை பேராசிரியர் செ.யோகராசாவும், வாழ்த்துரைகளை கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முதுநிலை விரிவுரையாளர்  ஆறுமுகம் சௌந்தரலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் சாரங்கபாணி அருள்மொழி ஆகியோர் நிகழ்த்தினர். ஏற்புரையையும் நன்றியுரையையும் நூலாசிரியர் தேநாயகம் தபேந்திரன் ஆற்றினார்.யாழ்ப்பாண நினைவுகள் - 2 அறிமுகவிழா (1) யாழ்ப்பாண நினைவுகள் - 2 அறிமுகவிழா (2)
யாழ்ப்பாண நினைவுகள் - 2 அறிமுகவிழா (4)
யாழ்ப்பாண நினைவுகள் - 2 அறிமுகவிழா (5) யாழ்ப்பாண நினைவுகள் - 2 அறிமுகவிழா (6) யாழ்ப்பாண நினைவுகள் - 2 அறிமுகவிழா (7) யாழ்ப்பாண நினைவுகள் - 2 அறிமுகவிழா (8)

Related posts

*

*

Top