நவீல்ட் பாடசாலையின் தமிழ்த்தின விழா

கைதடி நவீல்ட் (செவிப்புலன் விழிப்புலன் இழந்தோர்) பாடசாலையின் தமிழ்த்தின விழா இன்று 05.03.2016 சனிக்கிழமை காலை பாடசாலைப் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. 

பாடசாலை அதிபர் வாசுகி இராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் பிரதி அதிபர் ச.லலீசன் கொண்டார். அங்கிலிக்கன் திருச்சபையின் அருட்தந்தை வண. ந.ஞானகாருண்யன் ஆசியுரை வழங்கினார். ஆசிரியர் செல்வராணி சாம்சன் லூர்திஸ் வரவேற்புரை ஆற்றினார். மாணவர்களின் கலை நிகழ்வுகள் மனதைக் கவரும் வகையில் இடம்பெற்றன.

பாடல், இசையும் அசைவும், நாடகம் எனப் பல நிகழ்வுகள் இடம்பெற்றன. நிகழ்வில் கலந்து கொண்ட வெளிச்சமூகம் சார்ந்த பார்வையாளர்கள் கண்களில் நீர் ததும்ப நிகழ்வைப் பார்வையிட்டமையையும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.. கடவுளின் குழந்தைகள் எனப் போற்றப்படத்தக்க 150 பிள்ளைகள் இங்கு பயில்கின்றனர். இவர்களுள் பெரும்பாலானவர்கள் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இம்மாணவர்களில் கண்பார்வைக் குறைபாடுடையோரை விட கேட்டல் குறைபாடுடையோரே அதிகளவானோர் ஆவர். இவர்கள் பிரதானமாகச் சைகை மொழியையே நம்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சைகை மொழி பற்றிய அறிவை விசேடமாகக் கொண்டுள்ளனர்.

நவீல்ட் பாடசாலையின் தமிழ்த்தின விழா (1) நவீல்ட் பாடசாலையின் தமிழ்த்தின விழா (2) நவீல்ட் பாடசாலையின் தமிழ்த்தின விழா (3) நவீல்ட் பாடசாலையின் தமிழ்த்தின விழா (4) நவீல்ட் பாடசாலையின் தமிழ்த்தின விழா (5) நவீல்ட் பாடசாலையின் தமிழ்த்தின விழா (6) நவீல்ட் பாடசாலையின் தமிழ்த்தின விழா (7) நவீல்ட் பாடசாலையின் தமிழ்த்தின விழா (8) நவீல்ட் பாடசாலையின் தமிழ்த்தின விழா (9)

Related posts

*

*

Top