வேள்வித் திருமகன் திருப்பாடுகளின் காட்சி 17ஆம் திகதி ஆரம்பம்

Barack Obama

திருமறைக் கலாமன்றம் தயாரித்து வழங்கும் அரங்க ஆற்றுகையான வேள்வித் திருமகன் திருப்பாடுகளின் காட்சி எதிர்வரும் 17.03.2016 முதல் 20.03.2016 வரை நான்கு நாட்களுக்கு யாழ்ப்பாணம்,  திருமறைக் கலாமன்ற அரங்கில் இடம்பெறவுள்ளது.

வியாழன், சனி மற்றும் ஞாயிறு தினங்களில் மாலை 6.45 மணிக்கு ஆரம்பமாகும் திருப்பாடுகளின் காட்சி வெள்ளிக்கிழமை மட்டும் மாலை 7.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

பிரமாண்டமான அரங்க அமைப்பு, காட்சியமைப்பு, இயைமைப்பு, ஒலி,ஒளி போன்றவற்றுடனும் அரங்கிலும் அரங்கப் பின்னணியிலுமாக இருநூறுக்கும் அதிகமான கலைஞர்களுடனும் மேடையேற்றப்படவுள்ள வேள்வித் திருமகன் ஆற்றுகைக்கான ஏற்பாடுகள் இப்பொழுது இடம்பெற்று வருகின்றன.

திருமறைக் கலாமன்ற இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளாரின் எழுத்துருவிலும் நெறியாள்கையிலும் முதன்முதலாக கடந்த 2012 ஆம் ஆண்டு மேடையேற்றம் கண்ட திருப்பாடுகளின் காட்சி மேலும் புதிய மாற்றங்களுடன் 2014ஆம் ஆண்டில் இரண்டாவது தடவையாக மேடையேற்றப்பட்டு மிகுந்த வரவேற்பை பெற்றிருந்தது. இம்முறையுடன் மூன்றாவது தடவையாக மேடையேற்றப்படும் வேள்வித் திருமகன் திருப்பாடுகளின் காட்சிக்கான நெறியாள்கையை மன்றக் கலைஞரான தை.யஸ்ரின் ஜெலூட் மேற்கொண்டுள்ளார்.

நீ.மரியசேவியர் அடிகளாரால் எழுதப்பட்ட திருபாடுகளின் காட்சி பிரதிகளில் இருந்து மொழிநடையிலும் பொருள் அளிக்கையிலும் சற்று மாறுபட்டதாக எழுதப்பட்டுள்ள இப்படைப்பு வேள்விக் கருவை மையப்படுத்தியதாக அமைந்துள்ளது.

ஆண்டுதோறும் கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் திருமறைக் கலாமன்றத்தால் மேடையேற்றப்படும் திருப்பாடுகளின் காட்சியை பல்லாயிரக்கணக்கான மக்கள் பார்வையிடுகின்றமையும் இலங்கையிலேயே இடம்பெறுகின்ற மிகப் பெரிய அரங்க ஆற்றுகையாக இது அமைகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

One Comment;

*

*

Top