மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பின் வெளியீட்டு விழா

– கணபதி சர்வானந்தா

ஈழத்து சஞ்சிகை வரலாற்றில், ஈழத்தின் முதலாவது இலக்கிய சஞ்சிகையென முதன்மைப் படுத்தப்பட்ட மறுமலர்ச்சி இலக்கிய இதழ், 1941 தொடக்கம் 1946 வரை கையெழுத்துப் பிரதியாகவும், பின்னர் 1946 பங்குனி தொடக்கம் 1948 ஐப்பசி வரை அச்சுப்பிரதியாகவும் வெளிவந்திருக்கின்றது. அச்சுப்பிரதியாக வெளிவந்த மொத்தம் 23 இதழ்களையும் ஒன்றிணைத்து ஒரு மலராக ஆவணப்படுத்தப்பட்ட மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பு நூலின் வெளியீட்டு விழா கடந்த மார்ச் மாதம் ஆறாம் திகதியன்று யாழ்ப்பாணம் பொதுசன நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த விழாவிற்கு பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமை தாங்கினார். நூலக நிறுவன இயக்குனர் சேரன் சிவானந்த மூர்த்தியின் வரவேற்புரையைத் தொடர்ந்து தலைமையுரையும் பின்னர் வெளியீட்டு உரையை கோப்பாய் சிவமும் நூல் அறிமுக உரையை கவிஞர் கணேஸ்வரனும் நிகழ்த்தினர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நூலின் முதற்பிரதியை பிரபல தொழிலதிபர் E.S.P நாகரத்தினம் பெற்றுக்கொண்டார். இணைப்பிரதியை யாழ்ப்பாணம் பிரதேச அபிவிருத்தி வங்கியின் முகாமையாளர் பிரம்ம ஸ்ரீ க.லட்சுமண சர்மாவும், பருத்தித்துறை பிரதேச செயலர் கவிஞர் க.ஜெயசீலனும் பெற்றுக் கொண்டனர். நூலின் ஆய்வுரையை பேராசிரியர் துரை மனோகரன் நிகழ்த்த விரிவுரையைாளர் செல்லத்துரை சுதர்சனின் ஏற்புரையுடனும் நன்றிஉரையுடனும் விழா நிறைவுபெற்றது.

மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பின் வெளியீட்டு விழா (1) மறுமலர்ச்சி இதழ்களின் தொகுப்பின் வெளியீட்டு விழா (2)

Related posts

*

*

Top