பணவீக்கம் 1.7 சதவீதமாக அதிகரிப்பு

Barack Obama

ஜனவரி மாதத்தில் – 0.7 சதவீதமாகருந்த நாட்டின் பண வீக்கமானது ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் பெப்ரவரி மாதத்தில் 1.7 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளி விபரத் திணைக்களம் அறிவித்துள்ளது. இப்பணவீக்க அதிகரிப்பிற்கு முக்கிய பங்களிப்புக் காரணியாக உணவல்லா வகை காணப்பட்டது.

அந்த வகையில் வெறியம் சார் குடிவகைகள் மற்றும் புகையிலை, ஆடை மற்றும் காலணி தளபாடங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் வழமையான வீட்டு பேணல்கள் நலம் போக்குவரத்து மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகளின் துணைத் துறைகளில் கணிசமான அதிகரிப்புக்கள் அவதானிக்கப்பட்டன.

இது, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் உணவு வகையில் அவதானிக்கப்பட்ட ஒட்டு மொத்தவிலை வீழ்ச்சியினை விஞ்சிக் காணப்பட்டது.

ஆண்டுச் சராசரி அடிப்படையில் அளவிடப்பட்ட தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் ஏற்பட்ட மாற்றம் 2016 ஜனவரியில் பதிவு செய்யப்பட்ட 2.9 சதவீதத்திலிருந்து 2016 பெப்ரவரியில் 2.6 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்தது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாதாந்த மாற்றங்களைப் பரிசீலனை கொள்கையில் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் 2016 ஜனவரியிலிருந்து 2016 பெப்ரவரிக்கு 1.1 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

இந்த ­மாதாந்த வீழ்ச்சிக்கு முக்கியமாக உணவு மற்றும் வெறியமல்லா குடிபானங்களின் வகையில் காணப்பட்ட பொருட்­களின் விலைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணமாகும். அதன் பிரகாரம் காய்கறிகள், அரிசி, பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் எலுமிச்சம் பழம் என்பனவற்றின் விலைகள் இம்மாத காலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. வெறியம்சார் குடிவகைகள் மற்றும் புகையிலை, வீடமைப்பு, நீர், மின்வலு, வாயு, மற்றும் ஏனைய எரிபொருட்கள் தளபாடங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் மற்றும் வழமையான வீட்டுப் பேணல்கள் நலம் மற்றும் பல்வகைப் பொருட்கள் மற்றும் பணிகள் துணைத் துறைகள் 2016 பெப்ரவரியில் அதிகரித்தன.

அதேவேளை ஆடை, காலணி மற்றும் போக்குவரத்துத் துணைத் துறைகளின் விலைகள் பெப்ரவரியில் வீழ்ச்சியடைந்தன. தொடர்பூட்டல் பொழுதுபோக்கு, கலாசாரம், கல்வி, உணவகங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் துணைத் துறைகள் இம்மாத காலப்பகுதியில் மாற்றமின்றிக் காணப்பட்டது.

Related posts

*

*

Top