அகிலனின் ‘காலத்தின் விளிம்பு’ நூல் வெளியீட்டு விழா

பாக்கியநாதன் அகிலனின் காலத்தின் விளிம்பு (யாழ்ப்பாணத்தின் மரபுரிமைகளும் அவற்றைப் பாதுகாத்தலும்) நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 27.03.2016 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சபாலிங்கம் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் தலைமையுரையினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைத் தலைவர் பேராசிரியர் அ.நோ.கிருஷ்ணவேணியும் வரவேற்புரையையினை க.அருந்தாகரனும், பிரதம விருந்தினர் உரையினை வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றவுள்ளதோடு வெளியீட்டுரையினை நூலாசிரியர் பாக்கியநாதன் அகிலனும் சிறப்புரையினை ம.நிலாந்தன் ஆற்றவுள்ளனர். அத்துடன் பாராம்பரிய நாடக அரங்கப் பாடல்கள் தை.ஜஸ்ரின் ஜெலூட் குழுவினர் வழங்குகின்றனர் நன்றியுரை அ.சிவஞானசீலன் ஆற்றுவார்.

Related posts

*

*

Top