பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு சேவை அறிமுகம்

Barack Obama

பேஸ்புக் மூலம் உலகின் மூலைமுடுக்கில் இருந்து நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடிய வசதியை நேற்று 06.04.2015 புதன்கிழமை பேஸ்புக் நிறுவனம் ஆரம்பித்துள்ளது.

உலகின் எந்த மூலையிலிருந்தாலும், காணொளிகளை கையடக்கத் தொலைபேசியூடாக நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான வசதி இந்த திட்டத்தின் மூலம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பேஸ்புக் நிறுவுனர் மார்க் சுக்கர்பெர்க் தனது முகப்புத்தக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,

நாம் ஆரம்பித்துள்ள இந்த நேரடி ஒளிபரப்பு சேவை மூலம் எளிய முறையில் நேரடிக் காட்சிகளை ஒளிபரப்ப முடியும். இதன் மூலம் உங்களது சட்டைப்பையில் தொலைக்காட்சியை வைத்துள்ளீர்கள். இதனால் கைத்தொலைபேசியை வைத்துள்ள ஒருவர் நேரடிக் காட்சியை ஒளிபரப்ப முடியுமென குறிப்பிட்டுள்ளார்.

இச்சேவையின் மூலம் தொலைக்காட்சிப் பாவனையின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாக தெரிவிக்கபபடுகின்றது.

Related posts

*

*

Top