இந்துக்கல்லூரியின் புகைப்படம் மற்றும் சித்திர கண்காட்சி

– எஸ்.ரி.குமரன்

மானிப்பாய் இந்துக்கல்லூரியின் காண்பிய ஊடககழகம், சித்திரக்கழகம் இணைந்து நடாத்திய புகைப்படம், சித்திர கண்காட்சி கல்லூரியின் தொழில்நுட்டபீட மண்டபத்தில் காண்பிய

ஊடககழகத்தின் தலைவர் எஸ்.சாய்ராம் தலைமையில் கடந்த 07.04.2016, 08.04.2016 ஆகிய இரு தினங்கள் இடம்பெற்றது. நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் எம்.இந்திரபாலா பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நாடா வெட்டி ஆரம்பித்து வைத்தார்.

புகைப்படக்கண்காட்சியில் ஆர்.றொசான் எம்.பகிரதன் இ.விதுசன் எஸ்.நிஜந்தன் தி.திசாங்கன் காண்பிய ஊடககழக பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் ஆகியோரது புகைப்படங்கள் என 100 புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன். இப்புகைப்படங்களிற்கான வழிகாட்டலினை காண்பிய ஊடக கழக பொறுப்பாசிரியர் எஸ்.ரி.அருள்குமரன் மேற்கொண்டிருந்தார்

இதேவேளை சித்திர கழகத்தின் பொறுப்பாசியர் த.தீபனின் வழிகாட்டலில் மாணவர்களால் ஆக்கப்பட்ட 100 சித்திரஙங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. நிகழ்வில் பிரதிஅதிபர், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டு கண்காட்சியினைப் பார்வையிட்டனர்.

Related posts

*

*

Top