‘அநாதி’ அரங்க ஆற்றுகை

யாழ்.அரங்கக் கலைக் கழக welcome to Sunday show நிகழ்ச்சியில் நேற்று 10.04.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு ”அநாதி” – பரத நாட்டியத்தினை மையமாகக் கொண்ட அரங்க ஆற்றுகையினை நிகழ்த்தியிருந்தது.

இவ்வாற்றுகையில் கொழும்பில் இருந்து வருகை தந்த ஆற்றுகையாளராக அரங்கில் தன் நளின உடல் வெளிப்பாட்டாலும், சிறந்த முகபாவனைகளாலும், வேறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்தும் உடல் நிலைகளாலும் தனது நடன மற்றும் நாடக ஆற்றலை வெளிப்படுத்திய நாட்டிய கலாவித்தகர் ஆ.சிறீகாந் (நாட்டிய நுண்கலைமாணி) மிகுந்த பாராட்டினைப் பெற்றிருந்தார், இதில் காண்பிய வடிவமைப்பினை ம.சுலக்சன் வெளிப்படுத்த, ஒளி வடிவமைப்பு உதவியினை இ.மகிந்தன் மேற்கொள்ள, தி.தர்மலிங்கத்தின் ஒளி மற்றும் இயக்கத்தில் இனிதே ஆற்றுகை நிறைவு பெற்றது.

இந்த ஆற்றுகை ஒரு வித்தியாசமான அழகியல் மற்றும் அரங்கியல் அனுபவத்தினை ஏற்படுத்தியதாக பலரும் பாராட்டினைத் தெரிவித்தனர்.

ஒளிப்படங்கள்: ம.சுலக்சன்

'அநாதி' அரங்க ஆற்றுகை (1) 'அநாதி' அரங்க ஆற்றுகை (2) 'அநாதி' அரங்க ஆற்றுகை (3) 'அநாதி' அரங்க ஆற்றுகை (4) 'அநாதி' அரங்க ஆற்றுகை (5) 'அநாதி' அரங்க ஆற்றுகை (6) 'அநாதி' அரங்க ஆற்றுகை (7) 'அநாதி' அரங்க ஆற்றுகை (8) 'அநாதி' அரங்க ஆற்றுகை (9) 'அநாதி' அரங்க ஆற்றுகை (10) 'அநாதி' அரங்க ஆற்றுகை (11)

Related posts

*

*

Top