‘அம்பா’ பாடல் ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு

யாழ்.என்டா்ரைமன்ஸ் சாா்பில் சாலினி சாள்ஸ் தயாரிக்கும் ‘அம்பா’ ஆவணப்பட ஆரம்ப நிகழ்வு கடந்த நவம்பா் 30ஆம் திகதி அதன் கலையகத்தில் நடைபெற்றது.

குருநகா் கிராம மக்கள் கரவலைத் தொழிலில் ஈடுபடும் போது அம்பா பாடல்களையே பாடுவது வழக்கம். இப்பாடலையே ஆவணப்படுத்தும் முயற்சியாக இவ் ஆவணப்படம் தயாரிக்கப்படுகிறது. இதற்குரிய கடவுள் வாழ்த்து மற்றும் ஒரு அம்பா பாடல் ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குருநகா் நாட்டுக்கூத்து மன்றத்தின் வெளியீடாக அமையும் ‘அம்பா’ பாடல்களின் நெறியாள்கையை கலைமாமணி கிறகரி கிறிஸ்தோப்பரும், படத்தின் இயக்கத்தை சாளினி சாள்ஸ்சும் ஒளிப்பதிவை ரி.பிரியனும் செய்கின்றனா். அருள்சகோதரா் ஏ.எஸ்.சசிகரன் (தியோகோன்) ஆசிகூறி இந்நிகழ்வை ஆரம்பித்து வைத்தாா். ஆரம்பமாகக் கிறகரி கிறிஸ்தோப்பா் நெறிப்படுத்த கலைஞா்கள் ரோ.ஜெபக்குமாா், சி.அன்ரன், அ.ராஜ்குமாா், ந.ராசா ஆகியோா் அம்பா பாடலை பாடியதை யாழ்.என்டா்ரைமன்ஸ் ஒளிப்பதிவாளா் ரி.பிரியன் பதிவுசெய்தாா்.

அம்பா பாடல்களை காட்சிப்படுத்தும் ஒளிப்பதிவு குருநகா் மண்ணித்தலை, மணற்காடு, போன்ற இடங்களில் பதிவு செய்யப்பட இருப்பதாகவும்  கிறிஸ்தோப்பா் தொிவித்தாா். மழைகாலங்களுக்குாிய காட்சிகள் இம் மாதம் படமாக்கப்படவுள்ளது.

இவ் ஆவணப்படத்தில் 20 போ் நடிக்கிறாா்கள் அத்துடன் தை மாதம் வெளியிடப்படவுள்ளது.

*

*

Top