ஆரோக்கிய உணவுகளில் ஔிந்திருக்கும் ஆபத்துக்கள்

Barack Obama

உடல் நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டும் என்பதற்காக ஆரோக்கியமான உணவுகளை நாம் தேடி தேடி உண்டு வருகின்றோம். ஆரோக்கியமான உணவுகள் என நாம் நினைக்கும் அந்த உணவுகளே நமக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தினால்?

நாம் உட்கொள்ளும் சில ஆரோக்கியமான  உணவுகளில் கூட சிறு சிறு குறைகள் இருக்கத்தான்  செய்கின்றன. பாதாம் பால் அ-ருந்துவது உடலுக்கு நல்லது. பாதாம் பாலில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன என்பது உண்மைதான். ஆனால்  பெரும்பாலான பாதாம் பாலில் கடற்பாசியில் இருந்து எடுக்கப்பட்ட carrageenan என்ற பொருள் கலக்கப்படுகிறது. இது செரிமான பிரச்சினையை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கோப்பி, டீ அருந்துவது உடலுக்கு கேடு. கிரீன் டீ அருந்துவது தான்  உடலுக்கு நல்லது என நீங்கள் கூறலாம். கிரீன் டீயில் புற்று நோயை கட்டுப்படுத்தக்கூடிய பொருட்கள் அடங்கியுள்ளன என்பது மறுப்பதற்கு இல்லை. ஆனால் கிரீன் டீயில் உள்ள காபின்கள் ஒரு சிலருக்கு வயிற்று பிரச்சினையை ஏற்படுத்தும்.

திராட்சை,  பேரீச்சம்பழம் உள்ளிட்ட பழங்களில் ஏராளமான சர்க்கரை நிறைந்துள்ளன. இந்த பழங்கள் காய்ந்த பின்னர் அவற்றில் உள்ள சர்க்கரையின் அளவு மேலும் அதிகரிக்கும். எனவே காய்ந்த பழங்களை உட்கொள்வதால் குடலில் சர்க்கரை அதிகமாக சேரும் இதனால் வாயு தொல்லை ஏற்படும்.

அப்பிளை தினமும் உண்பது நோய் ஏற்படாமல் தடுக்க உதவும் என்று கூறுவர். ஆனால் அப்பிளை எதனுடன் உண்ணுகின்றோம் என்பது மிக முக்கியம். அப்பிளை தனியாக சாப்பிடுவதே சிறந்தது. உணவுடன் அப்பிளை உட்கொள்வது வீக்கத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாட்டுக்கறி,  பன்றிக்கறி உள்ளிட்டவை சிவப்பு  இறைச்சி என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் கொழுப்பு அதிகமாக உள்ளது. இத்தகைய கொழுப்புகள் புரோட்டீன் மற்றும் கார்போவைதரேற்றை விட அதிக நேரம் ஜீரணமாகாமல் வயிற்றில் இருக்கும். சில நேரங்களில் அந்த கொழுப்பு நமது குடலுக்கு செல்வதால் வயிறு வீங்கியது போல் தோன்றும்.

எனவே எந்த உணவாக இருந்தாலும் சரி அதனை சரியான முறையில் உட்கொள்வதுதான் நமது உடல் நிலையை சீராக வைத்திருக்கும்.

Related posts

*

*

Top