நாட்டிய வாரிதி, கலாபூஷணம் லீலாம்பிகை செல்வராஜாவின் கௌரவிப்பு விழா

ஈழத்து பரத நடனக் கலைஞர்களின் ஏற்பாட்டில் நானிலம் இனணயத்தின் ஊடக அனுசரனையில் நாட்டிய வாரிதி, கலாபூஷணம் திருமதி. லீலாம்பிகை செல்வராஜாவின் கலைப்பணிக்கான கௌரவிப்பு விழா எதிர்வரும் 23.04.2016  சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு  யாழ்ப்பாணம், நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வின் தலைமையினை நடன ஆசிரியை  (திருகோணமலை) திருமதி. ரேணுகா செல்வபுத்திரன் ஏற்கிறார். பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் மாண்புமிகு C.V.விக்னேஸ்வரன்  கலந்து சிறப்பிக்கிறார்.

சிறப்பு விருந்தினராக வடக்கு கிழக்கு மாகாண கலாச்சாரத் திணைக்களத்தின் ஓய்வு நிலைப் பணிப்பாளர் கலைஞர் வேல் ஆனந்தன் கலந்து கொள்கிறார். அத்துடன் கௌரவ விருந்தினர் ஓய்வு நிலைப் பேராசிரியர் முனைவர் திருமதி. மனோன்மணி சண்முகதாஸ் கலந்து சிறப்பிக்கிறார்.

*

*

Top