குருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும் – லீலாம்பிகை செல்வராஜா

– ரொக்சன், வடிவமைப்பு : பெஸ்ரியன்

குருவை மாணாக்கர்கள் மதிப்பதோடு கீழ்ப்படியவும் வேண்டும். அப்போதுதான் அவர்களால் நடனத் துறையில் சாதிக்க முடியும் எனத் தெரிவித்தார் நாட்டிய வாரிதி, கலாபூஷணம் திருமதி.லீலாம்பிகை செல்வராஜா.

நாட்டிய வாரிதி. கலாபூஷணம் திருமதி.லீலாம்பிகை செல்வராஜா அவர்களின் கலைப்பணிக்கான கெளரவிப்பு விழா 23.04.2016 அன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு இலங்கை வேந்தன் கலைக்கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விலே ஏற்புரை நிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையிலே,
இங்கு சில கலைஞர்கள் எங்களுக்கு எல்லாம் தெரியும் என்றும் தம்மால் எதையும் சாதிக்க முடியும் என்றும் நினைக்கிறார்கள் அனால் அவர்கள் கற்றது கையளவு அவர்களுக்கு அவர்களின் குருமார் கற்றது மட்டும்தான் தெரியும் இதனை அவர்கள் உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

நான் இந்நிலைக்கு வருவதற்கு எனது குரு பக்தியே காரணம் பல பாடசாலைகளில் கல்வி கற்றிருக்கிறேன் பல பாடசாலைகளில் படிப்பித்திருக்கிறேன் பல விருதுகளையும் பெற்றிருக்கிறேன் நான் மரத்தின் ஆணிவேர் நீங்கள் அதில் கிளைகள் நீங்கள் மேலோங்கி வளர வேண்டும் என்றார்.

நாட்டிய வாரிதி,கலாபூஷணம் திருமதி.லீலாம்பிகை செல்வராஜா பெற்றுக் கொண்ட விருதுகள்

1961ஆம் ஆண்டு சென்னை அடையாறு கலாஷேத்ரா – டிப்ளோமோ

1987இல் இலங்கை பிரதேச சபையினால் -“நூபுரலயநிதி” என்னும் விருது வழங்கப்பட்டது.

1997ஆம் ஆண்டு இலங்கை கலைகலாச்சார பண்பாடு அலுவல்கள் திணைக்களத்தினால் கலாபூஷணம் விருது வழங்கப்பட்டது. (சமய விவகார அமைச்சர் லக்‌ஷ்மன் ஜெபக்கொடி மற்றும் பேராசிரியர் ஏ.வீ.சுரவீரா அவர்களால் வழங்கப்பட்டது)

2003ஆம் ஆண்டு கார்த்திகை 11ஆம் திகதி கலாச்சார அலுவல்கள் அமைச்சும் ஸ்ரீலங்கா கலைக்கழகமும் இணைந்து நடத்திய அரசு, இசை, நடன விழாவில் -” கலார்த்தனா” விருது வழங்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு சக்தி தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தினரால் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கப்பட்டது.

2010ஆம் ஆண்டு மன்னார் தமிழ்ச் சங்கத்தினரால் நடாத்தப்பட்ட செம்மொழி மாநாட்டில் “தங்கம்மா அப்பாக்குட்டி” விருது வழங்கப்பட்டது.

2010 ஜப்பசி மாதம் 10ஆம் திகதி வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியால் நடாத்தப்பட்ட விழாவில் “நாட்டிய சுரதி” விருது வழங்கப்பட்டது.

2011ஆம் ஆண்டு ஜேர்மனி பழைய மாணவர்களால் பொன்விழாக் கொண்டாட்டம் வெகுவிமரிசையாக கொண்டாடப் பட்டது.

2012ஆம் ஆண்டு “நாட்டிய வாரிதி” என்னும் விருது ஜனகலாகேந்திரத்தில; நடைபெற்ற அரச நாட்டிய நாடக விழாவின்  வழங்கப்பட்டது.

2013ஆம் ஆண்டு அலரி மாளிகையில் முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் திருமதி சிராந்தி ராஜபக்ஸவினால் விருது வழங்கி கௌரவிக்கப் பட்டார்.

2013ஆம் ஆண்டு வடஇலங்கை சங்கீதசபை அமுதவிழவின் போது விருது வழங்கி  கௌரவிக்கப் பட்டார்.

2015ஆம் ஆண்டு பங்குனி மாதம் 2ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்கத்தினரால் தமிழேடிசை பாடல் இசைத்தமிழ் விழாவில் “தலைக்கோல் விருது”

2015ஆம் ஆண்டு முதலமைச்சர் விருதைக் கௌரவிக்கும் முகமாக பங்குனி 28 ஆம் திகதி சண்டிலிப்பாய் பிரதேச கராச்சாரப் பேரவையினால் கலைஞர் கௌரவிப்பின் நினைவுப் பரிசினை ஓய்வு பெற்ற பிரதம நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனால் வழங்கிக் கௌரவிக்கப் பட்டார்.

2016ஆம் ஆண்டு வடக்கு மாகாண பண்பாட்டு அமைச்சினால் “முலமைச்சர் விருது”

இந் நிகழ்விலே நாட்டிய வாரிதி, கலாபூஷணம் திருமதி.லீலாம்பிகை செல்வராஜாவின் மாணவிகள், ஆசிரியர்கள் மாணாக்கர்கள் எனப் பலபேர் கலந்து கொண்டு தமது குருவை வாழ்த்தியிருந்தனர்.

gallery 1

gallery 2gallery 3

gallery 4

One Comment;

  1. Mrs.v.pathmanathan said:

    இப்படி ஒரு விழா எங்கள் குருவுக்கு இலங்கையில் நடந்ததையிட்டு நானிலம் சஞ்சிகைக்கும்,அனைத்துக் கலைஆசான்களுக்கும்,கலைஞர்கள்,கலைஆர்வலர்களுக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகள்.இருக்கும்போது வாழ்த்துவது சிறப்பு. வளர்க கலைப்பாரம் பரியம்,வாழ்க பல்லாண்டுகள்.திருமதி.விக்னேஸ்வரி பத்மநாதன் (Germany)old student…

Leave a Reply to Mrs.v.pathmanathan Cancel reply

*

*

Top