நிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவு விழா

பிரான்ஸ் நாட்டில் கடந்த பத்து ஆண்டுகளாக கலைக்காக பல்வேறுபட்ட சேவைகளை ஆற்றிவரும் நிருத்தியாலயம் கலைக் கல்லூரியானது தனது பத்தாவது ஆண்டு நிறைவு

விழாவை எதிர்வரும் 30.04.2016 சனிக்கிழமை பிரான்ஸ் நகரில் வெகு விமர்சியாக கொண்டாடப் படவுள்ளது..

கடந்த பத்து ஆண்டுகளாக தமிழர் கலை வடிவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து புலத்தில் எமது தமிழ் மாணவ மாணவிகளுக்கு கலைப்பணி ஆற்றிவரும் நிருத்தியாலயம் கலைக் கல்லூரியானது புலம்பெயர் தேசத்தில் மிகுந்த பிரபல்யம் வாய்ந்த ஒரு கலைக் கல்லூரியாகும். இதனுடைய நிறுவுனரும் பிரதான செயற்பாட்டாளருமாகிய நாட்டிய கலாவித்தகர் திருமதி மீரா மங்களேஸ்வரன் அவர்கள் ஏலவே நிருத்தியம் என்கின்ற நூலின் ஊடாகவும் அதனுள் உள்ளடக்கபட்ட விடயங்கள் ஊடாகவும் பரதநாட்டிய சூழலில் நன்கு அறியப்பட்டவர். இன்று பாரத நாட்டிய ஆய்வுகள் பற்றிய ஆய்வை மேற்கொள்ளும் மாணவர்கள் இந்த நூலை பல இடங்களில் மேற்கோள் காட்டியும், உசாத்துணையாக பயன்படுத்துகின்ற சூழலையும் நாம் அண்மைக் காலமாக அறிய முடிகின்றது.

இத்தகைய சூழலில் நிருத்தியாலயம் கலைக் கல்லூரியின் பத்தாண்டு நிறைவுக் கலைவிழா ஆனது எதிர்வரும் சனிக்கிழமை பிரான்ஸ் நகரில் பல்வேறுபட்ட கலை நிகழ்சிகளோடு இடம்பெறுகின்றது. இந்த நிகழ்வில் இன்னுமொரு முக்கிய செயற்பாடாக வதிரிக் கிராமத்திற்கு ஒளியூட்டல் என்கின்ற தொனிப் பொருளில் அந்தத் திட்டத்திற்கான ஒரு ஆரம்ப அடித்தளமிடும் நிகழ்வும் இடம்பெற இருக்கின்றது.

Related posts

*

*

Top