தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டி! கிளிநொச்சியில் இருந்து 44 பேர் பங்கேற்பு

இலங்கை சதுரங்கச் சம்மேளனத்தின் 2016 ம் ஆண்டுக்கான தேசிய மட்ட இளையோர் சதுரங்கப் போட்டிகள் கடந்த 20 ம் திகதி தொடக்கம் 23ம் திகதி வரை கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்கு கொள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் இருந்து தகுதி பெற்ற 53 பேரில் 44 பேர் பங்குபற்றினர். இப்போட்டிகள் 8 வயதின் கீழ், 10 வயதின் கீழ், 12 வயதின் கீழ், 14 வயதின் கீழ், 16 வயதின் கீழ், 18 வயதின் கீழ் என்ற வயதுப்பிரிவுகளில் ஆண், பெண் பிரிவுகளாக நடைபெற்றன.

கிளிநொச்சியில் இருந்து முதல் தடவையாக இத்தேசிய போட்டியில் கலந்து கொண்டமை குறிப்பிடத் தக்கதாகும். கிளிநொச்சி மாவட்ட சதுரங்கச் சங்கத்தினர் இவ் ஆண்டு ஆரம்பத்தில் இருந்து மாவட்ட மட்டத்தில் பல்வேறு செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதன் வெற்றியாகவே இதனை நோக்கலாம் என சதுரங்க ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

இப்போட்டியில் கலந்து கொண்டவர்களில் மூன்று பேர் தரப்படுத்தல் பட்டியலில் இடம்பெறக்கூடிய செயற்திறனை வெளிப்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தகது.

Related posts

*

*

Top