கலையார்வனின் ‘கடல் கடந்த நாட்கள்’ நூல் அறிமுக விழா

கலையார்வன் எழுதிய ‘கடல் கடந்த நாட்கள்’ என்னும் பயண நூலின் அறிமுக விழா  நேற்று சனிக்கிழமை மாலை குருநகர் சென். ஜேம்ஸ் மகாவித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் தலைமையினை  குருநகர் கலை இலக்கிய அமைப்பின் தலைவர் அ. யேசுராசாவும்  வரவேற்புரையை யே.இக்னேசியசும்,  ஆசியுரையை  அருட்பணி யோ.மவுலிசும்,  அறிமுக உரையினை ஜோண்சன் ராஜ்குமாரும், மதிப்பீட்டுரையை  அருட்பணி செ.அன்புராசாவும் நிகழ்த்தினர்.

முதற்பிரதியை  லெ.கங்காதரன் ஆச்சாரி பெற்றுக்கொண்டார்.  இறுதியில், நூலாசிரியர் கலையார்வனின் ஏற்புடனும் நன்றியுரையுடனும் அறிமுகவிழா இனிதே நிறைவு பெற்றது.

கலையார்வனின்  'கடல் கடந்த நாட்கள்' நூல் அறிமுக விழா (1) கலையார்வனின்  'கடல் கடந்த நாட்கள்' நூல் அறிமுக விழா (2) கலையார்வனின்  'கடல் கடந்த நாட்கள்' நூல் அறிமுக விழா (3)

Related posts

*

*

Top