‘நல்லூர் நாடகத் திருவிழா 2015′ நாடக நூல் வெளியீடு

Barack Obama

கடந்த ஆண்டு நடைபெற்ற நல்லூர் நாடகத் திருவிழாவில் மேடையேற்றப்பட்ட நாடகங்களின் எழுத்துருக்கள், பட்டறிவுக் குறிப்புக்கள் விமர்சனங்கள் என்பவற்றின் தொகுப்பாக நாடக எழுத்தாளரும் நெறியாளருமான தேவநாயகம் தேவானந்த்தின் ‘நல்லூர் நாடகத் திருவிழா 2015′ என்ற நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 11.05.2016 புதன்கிழமை மாலை 4 மணிக்கு நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக இந்தியத் துணைத்தூதுவர் கௌரவ ஆ.நடராஜன் பங்கு கொண்டு நிகழ்வை சிறப்பிக்கின்றார். நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மன்னார் மாவட்ட செயலகத்தின் பிரதம கணக்காளர் லயன் கதிரவேல் கமலேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ளார். நாடக அரங்கக் கல்லூரியின் தலைவர் குழந்தை ம.சண்முகலிங்கம் சிறப்புரையையும் பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா வெளியீட்டுரையையும் நிகழ்த்தவுள்ளனர். நூலின் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்பலகின் இணைப்பாளர் கலாநிதி க.ஸ்ரீகணேசன் வழங்கவுள்ளார். நூலின் நயப்புரையை தேசிய கல்வியியல் கல்லூரியின் விரிவுரையாளர் து.இளங்குமரன் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன முகாமையாளர் நா. கமலதாஸ் வழங்கவுள்ளனர். நூலை இந்தியத் துணைத் தூதுவர் ஆ.நடராஜன் வெளியிட்டு வைக்க முதற்பிரதியை தென்மராட்சி கல்விவலையப் பணிப்பாளர் சுப்பிரமணியம் கிருஸ்ணகுமார் பெற்றுக் கொள்வார்.

நிகழ்வில் செயல் திறன் அரங்க இயக்கத்தினால் நடத்தப்பட்ட ‘நாடகத் தயாரிப்பு’ பயிற்சியில் பங்கு பற்றியவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

Related posts

*

*

Top