பாடசாலை செல்லும் வயதில் கச்சான் விற்கும் சிறார்கள்!

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் (வேலைக்குச் செல்லும்) நிலைமை ஏற்பட்டுள்ளது.

வறுமை காரணமாக பெற்றோர்கள் பிள்ளைகளை வேலைக்கு அனுப்புவது யுத்தத்தினால் பெற்றோர்களை இழந்த பிள்ளைகள், தந்தையை இழந்த பிள்ளைகள் என சிறுவர் தொழிலாளிகள் அதிகரித்துள்ளனர்.

இவற்றுக்கெல்லாம் மேலாக யாழ்ப்பாணம் கோட்டை அதனை அண்டிய பண்ணைப் பகுதி மற்றும் முனியப்பர் கோயில் பகுதியில் தந்தையும் பத்து வயசுக்கு உற்பட்ட மகனும், தாயும் அவரது ஐந்து மற்றும் பத்து வயதையுடைய மகள்களும் என வெவ்வேறு நபர்கள் கச்சான் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தம் பிள்ளைகளை கச்சான் விற்கக் கூட்டிச்சென்றால் சிறு பிள்ளைகள் கச்சான் விற்கிறார்கள் என பரிதாபப்பட்டு பொதுமக்கள் கச்சான் வாங்குவார்கள் என்ற எண்ணத்திலேயே தம் பிள்ளைகளை அழைத்துச் செல்கிறார்கள். இச் சிறுவர்களும் மக்களிடம் சென்று தயவு செய்து வாங்குங்கள் என்று கெஞ்சுவதனாலும் வேறு வழியின்றியும் இவர்களிடம் கச்சான் வாங்குகிறார்கள்.

இச் சூச்சமத்தை நன்கு அறிந்தே இச் சிறுவர்களின் பெற்றோர்களும் இவர்களைப் பயன்படுத்துவதோடு இவர்களின் எதிர்காலத்தையும் கெடுக்கிறார்கள். பாடசாலை செல்ல வேண்டிய வயதில் இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபடுவதினால் இச் சிறுவர்களின் மனநிலையும் பணத்தையே பிரதான நோக்காகக்கொண்டு செயற்பட ஆரம்பிப்பார்கள் பிஞ்சு வயசிலேயே நஞ்சும் விதைக்கப்படுகிறது.

ஒரு சில பெற்றோர்களின் இச் செயற்பாட்டினால் அவர்களின் பிள்ளைகள் மட்டுமின்றி இச் சமூதாயமும் சீர்கேடாகிறது. இதனை பொலீஸார் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா?

Related posts

*

*

Top