‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு

‘நினைவெல்லாம் நீதானே நுணுவில் பதியானே’ என்னும் அருள்மிகு கரவெட்டி நுணுவில் குளக்கட்டு விநாயகரின் அருட் சொட்டும் கானங்களை உள்ளடக்கிய பக்தி இசை இறுவெட்டு வெளியீட்டு நிகழ்வு நாளை 11.05.2016 வியாழக்கிழமை மாலை 7 மணியளவில் ஆலயத்தில் இடம்பெறுகின்றது .

ஒய்வு நிலை ஆசிரியை செல்வி கல்யாணி நமசிவாயம் தலைமையில் இடம்பெறும் மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை மோகனரசா பிரதீபன் அவர்களும் வெளியீட்டு உரையை ஆ.சிவநாதனும் (அதிபர்)  நிகழ்த்த உள்ளனர்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வடமாகாண கிராமிய மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் கலந்து சிறப்பிக்க உள்ளார். சிறப்பு விருந்தினராக கட்டைவேலி கிராம அலுவலர் க .பிரேந்திரா கலந்து கொள்கின்றார்.

இசையமைப்பாளர் சி.சுதர்ஷனின் இசையில் வெளிவரும் இந்த இசை தொகுப்பின் பாடல்களை கவிஞர் வேலணையூர் சுரேஷ், சி.பத்மராஜன், இராம் தேவாக் குருக்கள் மற்றும் வெற்றி துஷ்யந்தன் ஆகியோர் எழுதியிருக்கின்றனர். பாடல்களை நா.ரகுநாதன், எஸ்.ஜி.சாந்தன், பஞ்சமூர்த்தி குமரன், ஜெயபாரதி, தவநாதன் ரொபேர்ட், தேவ அமிர்தா, வெற்றி சிந்துஜன், மதுசிகன் ஆகியோர் பாடியிருக்கின்றனர்.

Related posts

*

*

Top