‘நல்லூர் நாடகத் திருவிழா 2015′ நூல் வெளியீட்டு நிகழ்வு

Barack Obama

நாடக எழுத்தாளரும் நெறியாளருமான தேவநாயகம் தேவானந்த்தின் ‘நல்லூர் நாடகத் திருவிழா 2015′ என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 11.05.2016 புதன்கிழமை  நாவலர் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்வின் பிரதம விருந்தினராக இலங்கை்கான இந்தியத் துணைத்தூதுவர் கௌரவ ஆ.நடராஜன் பங்கு கொண்டு நிகழ்வை சிறப்பித்ததோடு நூலையும் வெளியிட்டு வைத்தார். நூலின் முதற் பிரதியை தென்மராட்சி கல்வி வலைய கல்விப்பணிப்பாளர் இ.கிருஸ்ணகுமார் பெற்றுக் கொண்டார். சிறப்பு விருந்தினராக மன்னார் மவட்டச் செயலகக் கணக்காளர் க. கமலேஸ்வரன் கலந்து தனது சிறப்பான கருத்துக்களை முன்வைத்தார்.

ஈழத்தின் நவீன நாடக உலகின் தாய் என்று வர்ணிக்கப்படுகின்ற குழந்தை ம.சண்முகலிங்கம் நிகழ்வில் சிறப்புரையாற்றினார். நூல் வெளியீட்டுரையை பேராசிரியர் எஸ். சிவலிஙகராஜாவும் மதிப்பீட்டுரையை கலாநிதி க.சிறிகணேசன் நிகழ்த்தினர். நூல் நயப்புரையை கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் இளங்குமரனும்  தன்னார்வ தொண்டு நிறுவன முகாமையாளர் நா.கமலதாஸிம் வழங்கினார்கள். அரங்கு நிறைந்த பார்வையாளருடன் நூல் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது.

நல்லூர் நாடகத் திருவிழா-2015 நூல் வெளியீட்டு நிகழ்வு (1) நல்லூர் நாடகத் திருவிழா-2015 நூல் வெளியீட்டு நிகழ்வு (2) நல்லூர் நாடகத் திருவிழா-2015 நூல் வெளியீட்டு நிகழ்வு (3) நல்லூர் நாடகத் திருவிழா-2015 நூல் வெளியீட்டு நிகழ்வு (4) நல்லூர் நாடகத் திருவிழா-2015 நூல் வெளியீட்டு நிகழ்வு (5) நல்லூர் நாடகத் திருவிழா-2015 நூல் வெளியீட்டு நிகழ்வு (6) நல்லூர் நாடகத் திருவிழா-2015 நூல் வெளியீட்டு நிகழ்வு (7) நல்லூர் நாடகத் திருவிழா-2015 நூல் வெளியீட்டு நிகழ்வு (8)

Related posts

*

*

Top