சா்வதேச நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்ட படைப்புகள்

லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான சர்வதேச நிறுவனமாகிய ட்ரான்ஸ்பரன்ஸி இண்டர்நெஷனல் நிறுவனத்தின் லஞ்ச எதிர்ப்பு தின நிகழ்வு கடந்த 09.12.2014 அன்று பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர்களின் இரண்டு படைப்புக்கள் திரையிடப்பட்டன.

யாழ் என்டர்டைமன்ட் நிறுவனத்தின் தயாரிப்பாகிய ஷாலினி சாள்ஸ் இன் ‘கையூட்டு’ குறும்படம் மற்றும் T.பிரியன் இசையமைத்த லஞ்ச ஊழலுக்கு எதிரான பாடல் ஆகியனவே வெளீயிடப்பட்டு திரையிடப்பட்டன. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்ற வகையில் தமக்கு அந்நிகழ்வில் கிடைத்த கௌரவத்தையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் அத்தோடு தம் படைப்புக்கள் வெற்றி பெற ஒத்துழைத்த அனைத்துக் கலைஞர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் இசையமைப்பாளர் பிரியன் மற்றும் இயக்குனர் ஷாலினி சாள்ஸ் ஆகியோர் தெரிவித்தனா.

*

*

Top