நாடகப் பயிலகத்தின் புதிய பிரிவு ஆரம்பம்

Barack Obama

நாடகக் கலையின் மேம்பாடு கருதி, செயல்முறை சார்ந்த தேர்ச்சியினை மேம்படுத்தும் நோக்கோடு திருமறைக் கலாமன்றத்தின் நாடகப் பயிலகம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக நடத்தி வருகின்ற நாடக அரங்கியலுக்கான சான்றிதழ் கற்கைநெறியின் 2016ஆம் ஆண்டுக்கான புதிய பிரிவு எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 4.00 மணிக்கு பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மணிமண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இப்பயிற்சிநெறியில் நாடகக் கலையில் ஆர்வம் உள்ளவர்களும், நாடகமும் அரங்கியலும் பாடத்தினை தரம் 11,12,13 இல் பயிலும் ஆர்வமுள்ள மாணவர்களும் இணைந்து கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு மாதங்களைக் கொண்ட இப் பயிற்சிநெறிக்கான வகுப்புக்கள் சனி, ஞாயிறு தினங்களில் பிற்பகல் 3.30 மணி தொடக்கம் 05.30 மணி வரை நடைபெறுவுள்ளதுடன் போயா தினங்களில் முழுநாள் நாடகப் பட்டறையாகவும் நடைபெறவுள்ளது.

இப் பயிற்சி நெறியில் நாடக எழுத்துருவாக்கம், நடிப்பு, நெறியாள்கை, அரங்கக் துணைக்கலைகள் (வேட உடை, ஒப்பனை, காட்சி விதானிப்பு, இசை, ஒளிவிதானிப்பு), நாடகத் தயாரிப்பு, கூத்துப்பயிற்சிகள் போன்றவை பிரதான அம்சங்களாக அமையும்.

Related posts

*

*

Top