இலங்கை இசைக் கலைஞர் ராஜ்ஜின் பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வாழ்த்து

இலங்கை இசைத்துறையில் தனக்கென தனியானதொரு முத்திரை பதித்து வருபவர் ராஜ். அவரது பாடல்கள் யுடியூப் உட்பட சமூகவலைதளங்களில் வெகு பிரபலம். குறுகிய காலத்தில் தனக்கான ரசிகர் வட்ட த்தையே உருவாக்கி வைத்துள்ளார் ராஜ்.

கடந்த வருடம் அவர் வெளியிட்ட சகோதர மொழி பாடலான “யன தெனெக’ நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. யுடியூப்பில் சுமார் 6 இலட்சத்துக்கும் அதிகம் தடவை அப்பாடல் பார்க்கப்பட்டுள்ள நிலையில் அப்பாடல் தமிழ் மொழியிலும் வெளியாகியுள்ளது.

இப்பாடலுக்கு ஒஸ்கார் நாயன் ஏ.ஆர்.ரஹ்மானும் வாழ்த்து தெரிவித்துள்ளமையாகும். ரஹ்மானின் உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கின் ஊடாக ராஜ்ஜிற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை மிகவும் பெருமையாக கருதுவதாக ராஜ் தெரிவித்துள்ளார்.

அப்பாடலை இங்கு பார்க்க முடியும்:

*

*

Top