உரும்பிராயில் புதிய மணிமண்டபத் திறப்பு விழா

உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா எதிர்வரும் 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது. உரும்பிராய் கற்பகவிநாயகர் ஆலயப் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்நிகழ்வின் தலைமையினை ஆலய பரிபாலன சபைத் தலைவர் வங்கியாளர் சி. நந்தகுமார் ஏற்கிறார்.

நிகழ்வின் அதிதிகளாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா. வேதநாதன், ஆளுநரின் செயலர் இ.இளங்கோவன், கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

நல்லை ஆதீனமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கற்பக விநாயகர் ஆலயப் பிரதம குரு வண.தியாக கிருஷ்ணமூர்த்திக் குருக்கள், யாழ். சின்மயமிஷன் முதல்வர் வண. ஜாக்கிரத் சைதன்யர் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கவுள்ளனர்.

இந்நிகழ்வில் உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மாணவியரின் நடனம் மற்றும் புகழ்பெற்ற தவில் நாதஸ்வர வித்துவான்களின் கச்சேரியும் இடம்பெறவுள்ளது.

Related posts

*

*

Top