உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு

உரும்பிராய், கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா இன்று 05.06.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு சிறப்புற இடம்பெற்றது. உரும்பிராய் கற்பகவிநாயகர் ஆலயப் பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு ஆலய பரிபாலன சபைத் தலைவர் வங்கியாளர் சி.நந்தகுமார் தலைமை தாங்கினார். மண்டப அமைப்புக்கு பாரிய நிதிப்பங்களிப்பை நல்கிய லண்டனைச் சேர்ந்த கு. விவேகானந்தன் தம்பதியர் மண்டபத்தைத் திறந்து வைத்தனர்.

நிகழ்வின் அதிதிகளாக யாழ். மாவட்ட அரச அதிபர் நா. வேதநாதன், ஆளுநரின் செயலர் இ.இளங்கோவன், கோப்பாய் பிரதேச செயலர் ம.பிரதீபன், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன், கோப்பாய் ஆசிரிய கலாசாலை விரிவுரையாளர் ச.லலீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நல்லை ஆதீனமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தரதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கற்பக விநாயகர் ஆலயப் பிரதம குரு வண.தியாக கிருஷ்ணமூர்த்திக் குருக்கள், யாழ். சின்மயமிஷன் முதல்வர் வண. ஜாக்கிரத் சைதன்யர் ஆகியோர் ஆசியுரைகளை வழங்கினர்.

உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய மாணவியரின் வரவேற்பு நடனத்தினைத் தொடர்ந்து கற்பக விநாயகர் ஆலயப் பொருளாளர் சி.சிவராம் வரவேற்புரையாற்றினார், செயலாளர் ப.சேயோன் நன்றியுரை ஆற்றினார். மண்டப அமைப்புப் பணிகளில் பங்கேற்ற கலைஞர்கள் விருதுகள் வழங்கிக் கௌரவிக்கப் பட்டனர். சிறப்பு நிகழ்வாக பஞ்சமூர்த்தி குமரன் குழுவினரின் நாதஸ்வரக் கச்சேரி இடம்பெற்றது.

கற்பக விநாயகர் ஆலய வடக்கு வீதியில் இம்மண்டபம் அமைக்கப் பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கற்பக விநாயகர் ஆலய மகோற்சவம் நாளை 06.06.2016 திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

ஒளிப்படங்கள் : செந்தூரன் கிரபிக்ஸ்

உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு (1) உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு (2) உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு (3) உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு (4) உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு (5) உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு (6) உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு (7) உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு (8) உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு (9) உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு (10) உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு (11) உரும்பிராய் கற்பகவிநாயகர் மணிமண்டபத் திறப்பு விழா நிகழ்வு (12)

Related posts

*

*

Top