“கலாவித்தகா்“ மாணாக்கா்களை உருவாக்கும் வடஇலங்கைச் சங்கீதசபை

வடஇலங்கை சங்கீத சபையானது (08.08.1931) இல் யாழ்ப்பாணக் கல்வித் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை 83 வருடங்களாக மிகச்சிறப்பாக நுண்கலைகள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.

இவ்வடஇலங்கை சஙகீத சபையில் இணைந்து கொண்ட மாணாக்கா்களுக்கு தனிப்பட்ட ஆசிரியா் குழாம் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு பரீட்சைகள் நடைபெறும் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் மாதம் செய்முறைப் பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இச்சபையில் யாழ்.பல்கலைக்கழக நுண்கலை மாணாக்கா்கள் மற்றும் பாடசலை கல்வியை பூா்த்தி செய்த மாணாக்கா்கள் எனப் பலா் கல்வி கற்று வருகின்றனா். இச்சபையானது அரச அங்கீகாரம் பெற்ற சபையாக உள்ளமையினால் இங்கு நடைபெறும் எழுத்துப்பரீட்சை மற்றும் செய்முறைப் பரீட்சைகள் தரமிக்கனவாக உள்ளமையினால் இங்கு கல்வி பயிலும் மாணாக்கா்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது.

இச்சபையில் 6 படிமுறைகளாக பரிட்சைகள் நடைபெறுகின்றன. முதலாவது படிமுறை பரீட்சையில் 40 புள்ளிகளைப் பெற்றிருந்தால் அம்மாணக்கா் இரண்டாவது படிமுறைக்கு கல்வி கற்கச் செல்ல முடியும். 55 புள்ளிகளைப் பெற்றால் மட்டுமே ஆறாவது படிமுறையில் கல்வி கற்க முடியும். மாணாக்கா்கள் அடிப்படையில்  சதாரணதரப் பரீட்சையில் (OL), சித்தி அடைந்திருந்தால் மட்டுமே  ஜந்தாவது படிமுறையில் மாணாக்கா் கற்க முடியும். ஆறாவது படிமுறையில் கற்பதற்கு உயா்தரத்தில் (AL) 3 பாடங்கள் சித்தி அடைந்திருக்க வேணடும். ஆறாவது படிமுறையின் போது நடைபெறும் பரீட்சையில் 65 புள்ளிகளுக்குமேல் பெற்றால் மட்டுமே மாணாக்கா்கள் ”கலாவித்தகா்” பட்டம் பெற முடியும்.

யாழ்ப்பாணக் கல்வி வலயக் கல்விப் பணிப்பாளா் எஸ்.உதயகுமாா் இச்சபையின் தலைவராக உள்ளாா். கல்விப்பணிப்பாளா் மட்டுமே இச்சபையின் தலைமையேற்ற முடியும். 15போ் கொண்ட நிா்வாகமே இச்சபையின்  நிா்வாகப் பொறுப்பினை மேற்கொண்டு வருகின்றனா்.

ஒவ்வொரு வருடமும் இச்சபையில் கலாவித்தகா் பட்டம் பெறுவதற்கான ஆற்றுகை செயல்முறைப் பரீட்சைகள் மாணாக்கா்களுக்கு நடைபெற்று வருகிறது. கலாவித்தகா் பட்டத்துக்கு தகுதியுடையோா் இவ்வாற்றுகையின் போது தெரிவு செய்யப்படுகின்றனா்.

இவ்வடஇலங்கை சங்கீத சபையில் கல்வி கற்பதற்கு  ஒவ்வொரு வருடமும் அகில இலங்கை ரீதியாக 10,000 போ் விண்ணப்பிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

*

*

Top