யூரோ கிண்ணம் – 2016

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஐரோப்பிய ஒன்றியத்தினால் நடத்தப்படும் யூரோ கிண்ணம் என அழைக்கப்படும் ஐரோப்பிய சம்பியன்ஷிப் தொடர், இலங்கை நேரப்படி எதிர்வரும்11.06.2016 சனிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

பிரான்ஸில் இடம்பெறவுள்ள இந்தத் தொடர், ஜூலை 10ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இத்தொடரில், தொடரை நடத்தும் பிரான்ஸ் அணிக்கு நேரடியான தகுதி கிடைத்த நிலையில், போட்டியிட்ட 53 அணிகளிலிருந்து 23 அணிகள் தெரிவுசெய்யப்பட்டு, மொத்தமாக 24 அணிகள் பங்குபற்றவுள்ளன. இந்த 24 அணிகளும் 4 அணிகள் கொண்ட 6 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுப் போட்டிகள் இடம்பெறும்.

ஒவ்வொரு குழுவிலும் முதலிரு இடங்களைப் பெறும் அணிகள் நேரடியாக 16 அணிகள் கொண்ட சுற்றுக்குத் தகுதிபெறும். அடுத்ததாக, மூன்றாவது இடங்களைப் பெறும் அணிகளில் 4 அணிகளுக்கும், அச்சுற்றுக்குத் தெரிவாகும் வாய்ப்புகள் கிடைக்கும். பின்னர் காலிறுதிப் போட்டிகள் இடம்பெற்று, ஜூலை 6ஆம் மற்றும்; 7ஆம் திகதிகளில் அரையிறுதிப் போட்டிகள் இடம்பெறும். மாபெரும் இறுதிப் போட்டி, ஜூலை 10ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

Related posts

*

*

Top