நல்லை கலாமந்திர் வழங்கும் “சதங்கை நாதம்” நடனஆற்றுகை

நல்லை கலாமந்திர் நடனாலயம் வழங்கும் “சதங்கை நாதம்” என்ற நடன ஆற்றுகை எதிர்வரும் 19.06.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30 மணிக்கு நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெறவுள்ளது.

செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராகவும் ஓய்வுநிலை விரிவுரையாளர் கலாகீர்த்தி சாந்தினி சிவனேசன், ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் கலாபூஷணம் பத்மினி செல்வேந்திரகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

நல்லை கலாமந்திர் நடனப்பள்ளியின் இயக்குநர் அனுஷாந்தி சுகிர்தராஜின் நெறியாள்கையில் இடம்பெறும் நிகழ்வுகனில் பாட்டு விரிவுரையாளர்களான தவநாதன் றொபேட், சுகன்யா அரவிந்தன், மிருதங்கம் சின்னத்துரை துரைராஜா, வயலின் அம்பலவாணர் ஜெயராமன், தபேலா வெங்கடேச ஐயர் ரட்ணப் பிரபாகர சர்மா ஆகிய குயிலுவக் கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.

நிகழ்வில் வரவேற்புரையை நல்லை கலாமந்திர் தலைவர் நடராஜா சுகிர்தராஜும், ஆசியுரைகளை யாழ். சின்மயாமிஷன் வதிவிட ஆசாரியார் வண.ஜாக்கிரத் சைதன்யர், அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங் அடிகளார், செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆகியோர் ஆற்றவுள்ளனர். நல்லை கலாமந்திர் உபதலைவர் டாக்டர் பிறேமிளா கேதாரன் நன்றியுரை ஆற்றுவார்.

*

*

Top